24 special

மானத்தை வாங்கும் மாண்டச் புயல்..! இப்படியா வீசுவது? இப்படியா சிதைப்பது?

Mk stalin
Mk stalin

மாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் திமுக அமைத்த மரப்பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சிக்கி சின்னாபின்னாது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை அருகில் இருந்து கண்டுகளிப்பதற்காக நிரந்தர மரப்பாதை அமைக்கப்பட்டது. ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், மணற்பரப்பில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நடைபாதையில் சிரமம் இன்றி மாற்றுத்திறனாளிகள் செல்லலாம்.

இந்த மரப்பாலத்தை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கடந்த 27ம் தேதி திறந்துவைத்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்காக இப்படியொரு பாலத்தை திமுக கொண்டு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளைக் கூட மதிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்வது தான் திராவிட மாடல் ஆட்சி என்றெல்லாம் உடன் பிறப்புகள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வந்தனர். 

அப்படி ஆஹா.. ஓஹோ... என திமுகவினரால் புகழ்ந்து பேசப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாலம் மாண்டஸ் புயல் தீவிரமடையும் முன்பே சின்னா பின்னமாகி சிதிலமடைந்துள்ளது. புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் முற்றிலும் நாசமாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் “இதுதான் உங்க திராவிட மாடல் ஆட்சியா?”, கான்டாக்டர்கிட்ட கமிஷன் வாங்கிட்டு கட்டினால் இப்படித் தான் இருக்கும்’ என சகட்டு மேனிக்கு சாடி வருகின்றனர்.