24 special

சிங்கிளாக நின்று போராடிய மோடி; தொடர்ந்து 7வது முறையாக குஜராத்தை கைப்பற்ற காரணம் இதுவா?

Modi,amitshah
Modi,amitshah

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. குஜராத்தில் இம்முறை பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவி வந்தது. 


இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இரண்டையும் ஓரங்கட்டிவிட்டு குஜராத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆட்சியமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்று 7வது முறையாக வரலாற்று சிறப்பு மிக்க ஆட்சியை பாஜக அமைக்க உள்ளது. காங்கிரஸ் 17 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஐந்து இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வென்றுள்ளனர். 

குஜராத்தில் தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க பிரதமர் மோடியின் முகத்திற்கும், அவருடைய பிரச்சாரத்திற்கும் மக்களிடையே உள்ள வரவேற்பு தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் அடித்துக்கூறுகின்றனர். ‘மோடிக்கு ஓட்டு போடுங்கள்’ என்ற பிரச்சாரம் மட்டுமின்றி சிங்கிள் ஆளாக களத்தில் இறங்கி பிரதமர் மோடி செய்த சிறப்பான சம்பவங்கள் தான் வெற்றியைப் பெற்றுத்தர காரணமாக அமைந்துள்ளது. 

ஆம், குஜராத் மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேந்திர படேல் சில தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் பரப்புரையில் சரிவர பங்கேற்க முடியாமல் போனது. உள்துறை அமைச்சர் உடல்நிலை காரணமாக அமித்ஷா சில பரப்புரைகளில் பங்கேற்க முடியாமல் போனது. ஆனால் பிரதமர் மோடி 72 வயதிலும் எந்த பொதுக்கூட்டம் அல்லது சுற்றுப்பயணத்தையும் தள்ளிவைக்காமல் முழு எனர்ஜியோட இறங்கி பிரச்சாரம் செய்தார். பாரத பிரதமரின் இந்த எனர்ஜி ஒட்டுமொத்த மக்களையும் பாஜக மீது கவனத்தை திருப்பியுள்ளது. 

அதுமட்டுமின்றி வேட்பாளர் தேர்விலும், கிடைத்த சின்ன விஷயத்தைக் கூட கில்லியாக பயன்படுத்தும் யுக்தியிலும் கை நேர்ந்த பாரத பிரதமர்,  “நானே தேர்தலில் நிற்பதாக நினைத்து வாக்களியுங்கள்” எனக்கூறியது மக்கள் மனதில் நங்கூரம் ஈட்டது போல் நச்சென பதித்து தான் வாக்குகளாக மாறியதாக கூறுகின்றனர். 

மற்றொருபுறம் அமித் ஷாவின் யுகமும், பிரதமர் மோடியின் பிரச்சார யுக்திகளும் பாஜகவிற்கு வாக்குகளை வாரிக்குவிக்க காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல் பழங்குடியின மக்களின் நம்பிக்கையை பெற பாஜக தொண்டர்கள் செய்த கடும் பிரச்சாரமும் வரலாறு காணாத வெற்றிக்கு படிக்கட்டுக்களாக அமைந்துள்ளது. 

இதனால் தான் குஜராத் தேர்தல் வெற்றியை, மோடி அரசின் வளர்ச்சி மாடலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

_ அன்னக்கிளி