24 special

அண்ணாமலை நமக்கு என்னைக்கும் தலைவலிதான் - திருமாவளவனின் அரசியல் கணக்கு

Annamalai and thirumavalavan
Annamalai and thirumavalavan

 முதல்வர் அண்ணாமலையை கைது செய்து எப்படியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் காய் நகர்த்தி வருகிறார்.  தற்போதைய அரசியல் சூழலில் திமுக-அதிமுக போன்ற கட்சிகள் இடையே உள்ள மோதலை விட பாஜக மற்றும் இடதுசாரிகள் மோதல் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, காரணம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வளர்ந்து வந்த இடதுசாரிகளின் வளர்ச்சி தற்பொழுது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உதாரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இடதுசாரிகள் கட்சியை நடவடிக்கையை பார்த்தால் அவர்கள் திராவிட கட்சிகளுடன் ஏதோ ஒரு தரப்பில் கூட்டணியில் இருப்பார்கள், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் எம்.எல்.ஏ, எம்.பி தொகுதிகள் வாங்கிக் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் போல் தங்களை காட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 


ஆனால் இந்த முறை தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது தேசிய சிந்தனையை இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் விதைத்து வருகிறது. இதன் காரணமாக இடதுசாரி சிந்தனைகள் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது. இந்த இடதுசாரி சிந்தனைகள் வழக்கொழிந்து வரும் காரணத்தினால் கம்யூனிஸ்டுகள் அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சியினரின் அரசியல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட திருமாவளவன் தற்பொழுது சனாதன தர்மம் ஒழிப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் தேசிய சிந்தனையை வளர்க்கும் வலதுசாரி சித்தாந்தத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார். 

கடந்த வாரம் திருவாரூரில் பாஜக கூட்டத்தில் பேசிய தடா.பெரியசாமி திருமாவளவனின் லீலைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இந்த தடா.பெரியசாமி ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, விடுதலை சிறுத்தைகளின் கொள்கை மற்றும் கட்சி செயல்பாடுகள் பிடிக்காமல் பாஜகவில் வந்து இணைந்த தடா.பெரியசாமி தற்போது திருமாவளவனின் வெளியில் தெரியாத விஷயங்களை அம்பலப்படுத்தும் காரணத்தினால் திருமாவளவன் தரப்பு ரொம்பவே கோபத்தில் இருக்கிறது. இதன் விளைவாகத்தான் திருவாரூரில் பாஜக கூட்டம் போட்ட அடுத்த இரு தினங்களில் தடா.பெரியசாமியின் வீடு மற்றும் கார் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டது. 

இதற்கு பின்னணிகள் திருமாவளவன் ஆதரவாளர்கள் இருப்பதாக பாஜக தரப்பு குற்றம் சாட்டியது. மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து தடா.பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியை நான் விடமாட்டேன் இனி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒவ்வொரு விஷயங்களையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என கூறியதும், விடுதலை சிறுத்தைகளுக்கு குறிப்பாக திருமாவளவனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தடா.பெரியசாமி பட்டியல் இனத்தவர்களின் பாதுகாவலன் எனக் கூறிக்கொண்டு, பட்டியல் இனத்தவர்களுக்கு நான் ஏதாவது செய்து காட்டுவேன் என கூறிக்கொண்டு திராவிட கட்சிகளிடம் ஓட்டு வாங்கி பதவியில் அமர்ந்து அரசியல் செய்கிறது விடுதலை சிறுத்தைகள் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படடுத்த துவங்கிவிட்டார்.

இதே நிலை நீடித்தால் வரும் தேர்தல்களில் அது எதிரொளிக்கும் என்பதை திருமாவளவன் நன்கு உணர்ந்துவிட்ட காரணத்தினால் தற்பொழுது பாஜக எதிர்ப்பை முழு வீச்சுடன் கையிலெடுத்து அரசியல் செய்து வருகிறார். அதன் நீட்சியே பிபிசி ஆவணப்படத்தை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வெளியிட்டது, இப்போது திருமாவளவனின் பார்வை முழுக்க முழுக்க பாஜகவின் எதிர்ப்பிலேயே குவிந்துள்ளது. 

அதற்கு கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், இடதுசாரிகளை ஒன்று திரட்டுவதிலும் தனது நேரத்தை செலவிடுவதற்கு திருமாவளவன் துவங்கிவிட்டார். முதற்கட்டமாக திருமவவனின் கண்களை உறுத்துவது அண்ணாமலையின் வளர்ச்சி, திருமாவளவன் எப்படியாவது அண்ணாமலையை எப்படியாவது அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறார். நேற்று கூட திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், 'ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும்  என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? என கேள்வி எழுப்பியுள்ளவர், தமிழக முதலமைச்சர், அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படி அரசியலில் அண்ணாமலை தனக்கு பெரும் தலைவலியாக மாறி வருவதை உணர்ந்த திருமாவளவன் எப்படியாவது அண்ணாமலையை அடக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறார்.