24 special

தேர்தல் ஆணையத்திடம் சாட்சியுடன் சிக்கிய திமுக - ஈரோடு கிழக்கு இடைதேர்தலை நிறுத்தப்போகிறதா தேர்தல் ஆணையம்?

Mkstalin , erode election
Mkstalin , erode election

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் இடைத்தேர்தலில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மக்களுக்கு காசு வந்துச்சா என திறந்தவெளி பிரச்சாரத்தில் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே வாழ்நாள் பலபரிட்சை போல் விளங்கி வருகிறது, காரணம் இந்த இடைத்தேர்தல் திமுக கூட்டணிக்கு 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்கள் எனவும், அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமை ஏற்பதற்கு பிறகு அவரின் திறமைக்கு கிடைக்கவிருக்கும் மதிப்பெண்கள் என இரு தரப்பும் எடுத்துக்கொண்டு கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் இன்னும் ஒரு ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவு செய்யும் விதமாக இருக்கும் என நம்பப்படுகிறது, இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தலை மற்ற கட்சிகளை விட திமுக மிகவும் கூர்மையாக கவனித்து வருவது மட்டுமல்லாமல் தேர்தல் விதிமுறைகளையும் ஆங்காங்கே மீறியது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை திருமங்கலம் ஃபார்முலா என ஒன்று இருந்ததையே உடைத்து ஈரோடு கிழக்கு பார்முலா என்ற புது ஃபார்முலாவையே திமுக துவங்கிவிட்டது. 

அந்த வகையில் மக்களை பட்டியில் அடைப்பது, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பதாகவே கொலுசு, வாட்ச், புடவை போன்ற பொருட்களை மக்களுக்கு வாரி இறைப்பது போன்ற அனைத்து விதிமீறல்களும் வீடியோக்களாக வந்த நிலையில் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் வாக்காளர்களை சந்திக்க விடாமல் மக்களை முக்கியமான இடத்தில் வைத்து பாதுகாத்து வருவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இப்படி இதுவரை சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாகவும், செய்திகளாகவும் வெளிவந்த தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை தற்பொழுது திமுக எம்எல்ஏ உதயசூரியன் ஒப்புக்கொள்ளும் விதமாக மக்கள் முன்பு பிரச்சாரத்தில், 'உங்களை வந்து பார்த்தார்களா? எல்லாம் கொடுத்தார்களா? என திறந்தவெளி பிரச்சாரத்தில் கேட்டது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தேர்தலில் பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் பங்கேற்றார், அப்பொழுது மக்கள் மத்தியில் ஆட்சியின் சாதனைகளையும், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்வோம் என கூறி ஓட்டு கேட்பதற்கு பதிலாக, 'உங்களை எல்லாம் வந்து பார்த்தார்களா எல்லாம் செய்தார்களா என தேர்தலுக்கு விதிமுறைகளை திமுகவினர் மீறியதை ஒப்புக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----வீடியோ----
இப்படி ஈரோடு கிழக்கு தேர்தலில் விதிமுறைகளை மீறுவதை திமுக எம்எல்ஏ மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் பேசிய விவகாரம் ஒப்புதல் வாக்குமூலம் போல் இருப்பதால் இன்னும் இரு தினங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த வீடியோவை மையமாக வைத்து தேர்தலை நிறுத்தலாம் எனவும் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.