Tamilnadu

ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை! என்ன செய்யப்போகிறது அரசு?! பதற்றத்தில் மக்கள்!

annamalai
annamalai

தஞ்சாவூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துவந்த 17 வயது சிறுமியை அப்பள்ளி நிர்வாகம் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என துன்புறுத்தியும் அப்படி மாறாவிட்டால் தொடர்ந்து பள்ளியில் பயில முடியாது என மன அழுத்தம் கொடுத்து உள்ளனர்.


அது மட்டுமல்லாமல், அப்பள்ளி அருகே உள்ள விடுதியில் மாணவி தங்கி இருந்த நிலையில், மற்ற  மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்லவே, இச்சிறுமியை அழைத்து கழிப்பறை சுத்தம் செய்தல் பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்ய வைத்து உள்ளனர் பள்ளி நிர்வாகம். இதனால் மனமுடைந்து அவமானம் தாங்க முடியாமல் தோட்டத்திலிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலை  முயற்சி எடுத்துள்ளார்.

பின்னர் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி முதல் வாந்தி மயக்கம் உடல் வலி என மோசமான பிரச்சனையை சந்தித்து வந்த சிறுமியை ஜனவரி 15ஆம் தேதி அன்று தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது சோதனை செய்தபோது 85% நுரையீரல் பாதிக்கப்பட்டு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் ஜனவரி 18ஆம் தேதி கடைசியாக தான் விஷம் குடித்தது பற்றி மருத்துவரிடம் வாக்குமூலம் தெரிவித்து விட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து உள்ளார். தற்போது இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் உள்ள மக்களை கொதிப்படைய வைத்திருக்கின்றது. இப்படி ஒரு நிலையில் சிறுமி பேசிய வாக்குமூலம் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் அந்த குடும்பத்திற்கு தக்க உதவிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணாமலையின் பதிவு ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 17, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும். நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்! - இவ்வாறு பதிவிட்டுள்ளார் அண்ணாமலை