Tamilnadu

தோவலை உருவாக்கிய மோடியும் அந்த பட்டியலில் இருக்கிறார் பிரபல எழுத்தாளர் பகிர்ந்த ரகசிய தகவல்!

Modi
Modi

அஜித் தோவல் பிறந்ததினமான இன்று(20/01/)  அவரது புகழை சிறப்பிக்கும் வண்ணம் பிரபல இணைய எழுத்தாளர் ஸ்டான்லி ராஜின் முக்கிய தகவல் ஒன்றிணை பகிர்ந்துள்ளார் அது பின்வருமாறு :-


ஒரு நாட்டில் நல்லாட்சி நடக்க உளவு அவசியம், இதை முதன் முதலில் நிரூபித்தவன் மகாபாரத கண்ணன். அவனை போல் உளவாளி இன்றுவரை யாருமில்லை, நாரதர் அதற்கு  அடுத்த இடம்

உளவு என்பது மிக நுணுக்கமான கலை வீரமும் நிதானமும் பொறுமையும் அதே நேரம் கடும் விழிப்புணர்வும் அவசியம், தகவல்களை சேர்த்தல் விஷயத்தை உறுதி செய்தல் தகுந்த நேரம் வரை காத்திருந்தல் உரிய நேரத்தில் களத்தில் இறங்குதல் என அது சவாலும் சுவாரஸ்யமும் பொறுப்பும் மிக்கது, அதே நேரம் எப்பொழுதும் தலையில் கத்தியும் காலடியில் பள்ளமும் கொண்ட ஆபத்துமிக்கது.

உளவுபடை மிக சரியாக இருக்கும்நாடுதான் செல்வாக்காக வாழும் அதன் மக்களும் அச்சமின்றி வாழ்வார்கள், உளவு அவ்வளவு அவசியம் இதனால்தான் வள்ளுவன் "ஒற்றறிதல்" என அதிகாரமே இயற்றினான் சாணக்கியன் அதற்கு பல விளக்கங்களையும் இலக்கணங்களையும் கற்பித்தான்.

உளவுபடை எவ்வளவு முக்கியமானது என இந்திய வரலாற்றில் நிரூபித்தவன் வீரசிவாஜி, அவனின் அதிசயிக்கதக்க வெற்றிக்கெல்லாம் அவனின் மிக சாதுரியமான உளவுபடைதான் காரணம் இந்த நூற்றாண்டின் ஆகசிறந்த உளவுபடை வரலாறு இஸ்ரேலிடம் இருந்து தொடங்குகின்றது.

இஸ்ரேலின் டேவிட் கீம்சி, எலி கோஹன் என தேர்ந்த உளவாளிகள் சரித்திரம் வாசிப்போர் மனதை உறைய வைக்கும் ரகம் அவ்வளவு சாகசம் முந்தைய‌ மொசாட் தலைவர் கோஹனின் அதிரடிகளும் சாகசனமாவை, சிரியா ஈராக் ஈரான் ஏமன் என இஸ்ரேல் புகுந்து மாயமாக அடிப்பதிலும், சவுதி மற்றும் அமீரக நாடுகளை அரசியல் ரீதியாக வளைப்பதிலும் அவரின் திறமை தன்னிகரற்றது, ஈரானிய அணுவுலைக்குள் புகுந்து தகவல்களை அடித்து வந்ததும் அந்நாடின் உள்ளே புகுந்து விஞ்ஞானிகளை தூக்கியதும் சாதாரணம் அல்ல‌

சுமார் 70 ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கும் உளவுதுறை மொசாத் , இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு அமெரிக்க சி.ஐ.ஏ பணத்தாலும் இன்னும் வினோத அரசியல்களாலும் உளவுபார்க்கும் ஒப்பற்ற அமைப்பு, எல்லா நாட்டு தூதரகங்கள் முதல் நடைபாதை வியாபாரிகள் வரை அவர்கள் வலைபின்னல் மிகபெரிது, உலகினை இன்று கட்டுபத்துபவர்கள் அவர்களே.இப்பொழுது சீனாவுக்கு தனி அலுவலகமே திறந்துவிட்டோம் என பகிரங்கமாகவே சொல்கின்றார்கள் ஆனால் சீனாவால் ஒரு உளவாளியினை கூட தூக்க முடியவில்லை , அதுதான் சி.ஐ.ஏ இப்போதைய ரஷ்ய உளவுதுறையும் சாதாரணம் அல்ல, புட்டீன் தலமையில் அதுவும் அடித்து ஆடுகின்றது, எங்கெல்லாமோ அதன் கரங்கள் நீள்கின்றன‌.

இன்னும் சில உளவாளிகள் அப்படி உலகில் உண்டு, பாரதத்தில் அந்த மிகசிலரில் இன்று உலகம் உற்று கவனிக்கும் ஒருவர் உண்டென்றால் அது அஜித்தோவால் ரவீந்திர கவுசிக் போன்ற பாரதம் கண்ட மிகசிறந்த உளவாளிகளில் அவரும் ஒருவர். இன்று இத்தேசத்தினை காத்து நிற்கும் மாபெரும் மாயவித்தைக்காரன்.

அவர் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து கேரளாவில் 70களில் பணிதொடங்கினார். அவரின் தந்தையும் ஒரு ராணுவத்தார். 1975க்கு பின் அவரின் சாகச வாழ்வு தொடங்கிற்று, எம்.கே நாராயணனின் சீடர் அவர் சிக்கிமினை கைபற்ற அமெரிக்காவும் சீனாவும் பல நாடகங்களை நடத்தியபொழுது தேர்ந்த ராஜதந்திரியாக செயல்பட்டு அதை இந்தியாவோடு இணைத்தவர், இந்திரா அந்த சாகசத்தில் தோவலுக்கு பெரும் இடம் கொடுத்தார்.

வடகிழக்கு மாநில தீவிரவாதிகளை, சீனாவின் துணையோடு ஆட்டம் போட்ட கோஷ்டிகளை, சிக்கிமினை பிடித்து  இந்தியாவில் இருந்து சில மாநிலங்களை பிரித்துகாட்டுவோம் என சவால்விட்ட சீன பினாமிகளை கருவறுத்ததில் தோவலின் பங்கு மகத்தானது.

1980களில் உளவாளியாக மிசோரம் மாநில சக்திகளுக்குள் ஊடுருவி அவர்களை நம்ப வைத்து, பர்மாவில் இருந்த அவர்கள் வேர்வரை கண்டறிந்து இந்திய அரசுக்கு தெரியபடுத்தி தப்பி வந்ததெல்லாம் மாபெரும் சாசகம், அதுவும் அவர்களுக்கு தன் பிராமண மனைவியினை பன்றிகறி வைத்து நம்பவைத்த சாகசமெல்லாம் தனிரகம்.

அந்த மிசோர் எனும் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அவர்களை குழப்பி அடித்து அவர்களை ஒழித்து கட்டியது இன்று உளவுதுறை பாலபாடம் தீவிரவாதிகளோடு பழகி அவர்களோடு நாய்கறி பன்றிக்கறி எல்லாம் உண்டு, இன்னும் என்னென்ன காரியங்களையெல்லாமோ செய்து அநாசயாமாக அவர்களின் தலமை முகாமை கண்டறிந்து சுற்றி வளைத்தவர் அவர்.

பொற்கோவில் ஆப்பரேஷன்களிலும் பஞ்சாபின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தியதிலும் அவருக்கு பங்கு இருந்தது, இந்திரா அவரை பல ரகசிய ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தினார் நமக்கெல்லாம் ஆப்பரேஷன் புளூஸ்டார் தெரியும், ஆப்பரேஷன் பிளாக் தண்டர் தெரியாது.

அதாவது இந்திரா படுகொலைக்கு பின்னும் காலிஸ்தான் அடங்கவில்லை, 1986 மற்றும் 1988ல் பொற்கோவிலை கைபற்றி மறுபடியும் சவால் கொடுத்தார்கள், இந்திராவே இல்லா நிலையில் டெல்லி தலமை பீடம் அஞ்சியது பொற்கோவிலுக்குள் என்ன நடக்கின்றது என தவியாய் ராணுவம் தவித்த நிலையில் களத்துக்கு வந்தார் தோவல்.

ரிக்சாகாரன் வேடத்தில் சுற்றி காலிஸ்தான் இயக்கத்தில் தான் பாகிஸ்தான் உளவாளி என ஊடுருவி, அவர்கள் பஞ்சாப் கோவிலை முற்றுகையிட்டிருந்தபொழுது கோவிலுக்குள் சென்று உளவு பார்த்து இந்திய ராணுவத்துக்கு சொன்னதெல்லாம் மாபெரும் தேசிய சேவை, உள்ளே இருந்த 200 தீவிரவாதிகளை பார்த்து வந்தது அவர்தான்.

அவர்களுக்கு நீரும் மின்சாரமும் கிடைக்கா வகையில் அவர்களை மடக்கி ஆப்ரேஷன் பிளாக் தண்டரை வெற்றிகரமாக நடத்தி கொடுத்தார், இந்தியா அவரை கொண்டாடியது, பாகிஸ்தான் வெறுப்பாக பார்த்தது பின்னாளில் காலிஸ்தான் அவரை குறிவைத்து தேடியும் சிக்கவில்லை.

பஞ்சாபுக்கு பின்பே காஷ்மீருக்கு வந்தார் தோவல், அங்கும் ஊடுருவி சில சில்லறை இயக்கங்களை நடத்தி பெரும் தகவலை கொண்டுவந்தார், இந்தியாவுக்கு காஷ்மீர் தீவிரவாதத்தை முழு வடிவமாக காட்டி கொடுத்தவர் அவரே இன்னும் ஆழமாக உளவு பார்க்க பாகிஸ்தானில் 8 ஆண்டுகள் உளவாளியாக அவர் பணியாற்றியது இன்றும் பாகிஸ்தானியராலே ஜீரணிக்கமுடியா விஷயம் ஆம் அவர் இஸ்லாமியராக மாறி, பாகிஸ்தானி பெண்ணையே மணமுடித்து மகா கில்லாடிதனமாக உளவுபார்த்து தகவல் சொன்னார்.

அந்த வகையில் ரவீந்திர கவுசிக்கும் தோவலும் மகத்தானவர்கள், மிகபெரிய சவாலை உயிரை பணயம் வைத்து எடுத்தவர்கள். ஆனால் கவுசிக் சிக்கி கொண்டார் தோவல் சிக்கவில்லை எனினும் கவுசிக் கைதுக்கு பின் உஷாரான பாகிஸ்தான் தோவலையும் கைது செய்யும் வாய்ப்பு இருந்தது காரணம் கம்மல் அணிந்த அதாவது காதுகுத்திய வடு தோவல் காதில் இருந்தது.

இதை பார்த்த சில பாகிஸ்தானியருக்கு சந்தேகம் வருமுன், தோவல் ஒரு இந்து எனும் சந்தேகம் வரும் முன் தன் காதையே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றினார், அட்டகாசமான வித்தை இது. அதன்பின் பாகிஸ்தானில் இருக்கும்வரை அவருக்கு சிக்கல் இல்லை பாகிஸ்தானின் உருது மொழியினை எல்லா ஸ்லாங்கிலும் பேசியது மகா ஆச்சரியம்.பாகிஸ்தானின் அணுமையங்கள் உள்ளிட்ட எல்லா தகவலையும் திரட்டி வந்தவர் அவர்தான், ஆனால் இந்திராவுக்கு பின் வலுவான தலமை இல்லாததால் இஸ்ரேல் பாணியில் பாகிஸ்தான் அணுவுலைகளை தகர்க்கும் வேகம் இந்தியாவுக்கு இல்லை.

ஆம் அவ்வகையில் தோவலின் உழைப்பு வீணானது, ஆனாலும்  பாகிஸ்தானில் மாபெரும் உளவு வலையினை பின்னி வைத்தார் தோவல், அந்த வலை இன்றும் உண்டு, அஜித் தோவல் ஏற்படுத்தி வைத்ததே பலுசிஸ்தான் சிக்கல் இன்று பாகிஸ்தானின் மிகபெரிய சிக்கலாகவும் விரைவில் அத்தேசம் உடையலாம் எனும் அளவு பலுசிஸ்தானில் இந்திய பிடியினை இறுக்கி வைத்தவர் அவர்தான்.

சிக்கிம் போல எளிதாக முடிந்திருக்க வேண்டிய ஈழபிரச்சினை மிகபெரிதாக காரணமே இந்திரா காலத்துக்கு பின் தோவல் அந்த திட்டத்தில் இருந்து ஒதுக்கிவைக்கபட்டதுதான் தோவலை இந்திராகாந்தி பயன்படுத்தியது போல் ராஜிவும் பயன்படுத்தியிருந்தால் இச்சிக்கல் வெடித்திருக்காது, பிரபாகரன் முளையிலே கிள்ளபட்டிருப்பான்.

தோவலின் நுண்ணிய அறிவும், ஆற்றலும், வியூகமும் மகா வியப்பானது அவராலே காலிஸ்தான் முதல் காஷ்மீரிய தீவிரவாதிகளின் விமானகடத்தல் பல முறியடிக்கபட்டன, எவ்வளவோ முறை தீவிவரவாதிகள் அவரிடம் தோற்றனர். பலமுறை தோற்று அவர்கள் கடைசியில் வென்ற இடம் காந்தகார் கடத்தல் அது ஒன்றே தோவாலின் கரும்புள்ளி, அதுவும் தோவலின் தோல்வி அல்ல அன்று பல விஷயங்களில் இந்தியா பலவீனமாக இருந்தது, அதாவது தோவலின் கரங்கள் கட்டபட்டிருந்தன.

தாவூத் இப்ராஹிமுக்கு எத்தனையோ முறை கட்டம் கட்டினார் தோவல், மும்பையிலும் பாகிஸ்தானின் கராச்சியிலும் துபாயிலும் அவர் தாவூத்தை தீர்த்து கட்டமுயன்ற பொழுதெல்லாம் காங்கிரஸ் அரசு தாவூத் வீழ சம்மதிக்கவில்லை

இதனால் ஐந்துமுறை தப்பினான் தாவூத், அந்த கடும் வன்மத்திலும் அதிர்ச்சியிலும் ஒரு கட்டத்தில் மிக மிக கொடிய மனஉளைச்சலுக்கு ஆளானார் தோவல் நல்ல அரசு அமையாமல் இங்கு அதிகாரிகள் நாட்டை காக்க முடியாது என மனதுக்குள் உறுமிகொண்டே இருந்தார்.

அடிபட்ட சிங்கமாக அப்படியே ஓய்வுபெற்று 2005ல் குஜராத்தில் சில சேவைகளை செய்தபொழுதுதான் மோடி அஜித்தோவல் நட்பு உருவானது இருவரும் நாட்டுபற்றை தவிர வேறு என்ன யோசிப்பார்கள்?. தோவலின் நாட்டுபற்றையும் இத்தேசம் செய்ய வேண்டிய எல்லா நடவடிக்கை பற்றியும் இருவரும் பேசிகொண்டார்கள்.

ஆனால் என்ன செய்வது, காலம் வாய்க்கவில்லை ஆனாலும் அவர்கள் மாபெரும் திட்டமெல்லாம் வைத்திருந்தார்கள் காலம் அவர்களுக்கு 2014ல் வாய்த்தது, தான் பிரதமரானதும் பாதுகாப்பு விஷயத்தில் தோவாலை தவிர யாரிடமும் ஆலோசனை கேட்டதில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார் தோவால், அந்த சிங்கத்தின் கட்டுகளை அவிழ்த்து தேசவிரோதிகளை வேட்டையாட முழு அதிகாரம்  வழங்கினார் மோடி தோவலின் முதல்  கர்ஜனை காஷ்மீரில் கேட்டது, 1980களிலே அதாவது தீவிரவாதம் கொடிய நிலையில் கொடிகட்டி பறந்தபொழுதே அங்கு தாக்குபிடித்து பழகியவர் என்பதால் அனாசயமாக ஆடினார் தோவல் அவர் செய்த கடும் முன்னெச்செரிக்கையே காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வழிசெய்தது, அதைவிட முக்கியம் அமைதி நிலைக்க வழி செய்தது.

எல்லா பூச்சாண்டிகளையும் பொய்யாக்கினார் தோவல்.அஜித்தோவாலின் வழிகாட்டலில்தான் இந்தியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது, இன்னும் பல அதிரடிகளை செய்தது.தாவூத்தின் கதையினை பாகிஸ்தானில் முடித்து வைத்ததும் தோவலே, இப்பொழுது நேபாளம் வாலாட்டிய பொழுதும் சீனா  வாலாட்டியபொழுதும் ஒட்ட நறுக்கி வைத்திருப்பதும் தோவாலின் திட்டங்களே.

நாடு இன்று பெரும் அமைதியுடனும் ஓலைவெடி கூட வெடிக்காத பூரண அமைதியுடனும் இருகின்றதால் அதற்கு காரணம் தோவல் ராமர்கோவில் தீர்ப்பு நேரம் தேசம் நெருப்பாற்றை கடந்தபொழுதும், குடியுரிமை திருத்தசட்டம் போராட்டம் பெரிதான பொழுதும் அவரே தேசத்தை காத்தார். இப்பொழுது விவசாயிகள் போராட்டமும் அவரின் ராஜதந்திர அணுகுமுறையாலேதான் அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ரபேல் விவகாரம் முதல் இன்று இந்தியா பெற்றிருக்கும் சகல நுட்பங்களும் இந்தியா வந்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு முன்னாள் சி.ஐ.ஏ தலைவர் மைக்பாம்பியோடு இந்தியா செய்த பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய உளவு தகவல் பகிர்வுக்கு வழி செய்தது, அதனால் எல்லா வகை தேச ஆபத்தும் கண்காணிக்கபட்டு முறியடிக்கபடும்

அதனை செய்துகாட்டியவர் அஜித் தோவால், அதாவது சி.ஐ.ஏ அமைப்புடன்  கைகோர்த்து ஆனால் அதன் கைக்குள் சிக்காமல் ஒருவித ஜெகஜாலத்துடன் பாகிஸ்தானை அடக்கி வைக்கும் அட்டகாசமான திட்டம் அது, தோவலின் மகா முத்தாய்ப்பான திட்டம் அது. நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தான் செய்த மொத்த தியாகத்துக்கும் மதிப்பளித்து மோடி கொடுத்த வாய்ப்பினை இன்று மிக சிறப்பாக செய்கின்றார் தோவால்.

ஒரு விஷயத்தில் நாம் மனம் நெகிழ்கின்றோம் இன்று இத்தேசத்தின் நிஜபாதுகாப்பாளன் நாயகன் அஜித் தோவாலே, மோடி அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கின்றார் "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கு ஏற்ப மிக சரியான நபரிடம் மகா முக்கியமான பொறுப்பினை கொடுத்து தேசத்தை காத்து நிற்கின்றார் மோடி.

தோவாலால் பலம் பெற்றது தேசம், தோவாலால் தீர்க்கமுடியா சிக்கல்களை தீர்த்தது தேசம் மக்கள் தனக்கு தந்த ஆதரவை அப்படியே தோவலுக்கு கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த மோடியினை இந்த இடத்தில் வாழ்த்தியே தீரவேண்டும், அதில் அரசியல் இல்லை, வாக்கு அரசியல் இல்லை, புகழ் அரசியல் இல்லை தேச நலன் ஒன்றே இலக்கு, இதனால்தான் மோடியினை நாம் வாழ்த்துகின்றோம்.

அஜித் தோவாலின் சாதனைகளின் ஒரு துளியினைத்தான் நாம் சொன்னோம், இவை எல்லாம் சொற்பமாக வெளிவந்தவை, அஜித் தோவால் ரஷ்ய புட்டீன் போல தேர்ந்த உளவாளி என்பதால் பல கதைகள் வெளிவராது ஆனால் 1980களில் இருந்து இத்தேசம் சாதித்த மாபெரும் பாதுகாப்பு மற்றும் உளவு விஷயங்களில் அவர் இருப்பார் அல்லது அவரின் நிழல் இருக்கும்

உளவாளியும் சாகசவீரனும் ஆட்சிக்கு வருவதெல்லாம் இஸ்ரேலில் மட்டும் சாத்தியம் என நினைத்த நிலையில் இந்தியாவில் அதை சாத்தியமாக்கினார் மோடி ஜெய்சங்கர் , இந்த அஜித் தோவால் போன்ற மகா திறமையானவர்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார் மோடி ஒரு காலம் வரும், அக்காலம் அந்த வரிசையில் இப்படி சொல்லும்

சாணக்கியன் சந்திர குப்தன் வரிசையில், வீரசிவாஜி காகபட்டர் வரிசையில், ஹரிகர புக்கர் வித்யாரண்யர் வரிசையில் மோடியும் அஜித்தோவாலும் நிச்சயம் வருவார்கள், வந்தே விட்டார்கள் சுதந்திர் இந்தியாவின் ஒப்பற்ற உளவு தலைவனுக்கு, நாட்டுபற்று மிக்க சாகசகாரனுக்கு, உலமமகா ராஜதந்திர உளவாளிகளின் தலைமகனுக்கு இன்று பிறந்தநாள் கண்ணன் உலாவிய மண் எக்காலமும் தலைசிறந்த உளவாளிகளை கொடுக்கும் என நிரூபித்த அந்த அஜித் தோவாலுக்கு பிறந்த நாள் ஒரு நல்ல காவல் அதிகாரி எப்படி உளவாளியாக சாதிக்க முடியும் எப்படி எல்லாம் உயரமுடியும் என தன்வாழ்வினையே பாடமாக்கிய அந்த நாயகனுக்கு பிறந்தநாள்.

வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் மரணத்தின் வாசலில் இருந்து, நெருப்பை கடந்து, விஷத்தை ஜீரணித்து நாட்டிற்காக வாழும் நாயகன் அவர் ஆம், கவலையாய் அதை சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது வடகிழக்கு குழுக்கள், காலிஸ்தான், காஷ்மீரிய குழுக்கள், பாகிஸ்தான், ஈழம், ஆப்கன் என எல்லா நாட்டு தீவிரவாதிகளும் அவர் உயிருக்கு குறி வைத்திருக்கின்றனர் இவரை உருவாக்கிய மோடியும் அந்த பட்டியலில் இருக்க்கின்றார் அதாவது இந்நாட்டுக்கு எதிரான சக்திகளை இவர்கள்  உடைத்தெறிந்ததால் அனைத்து தேசவிரோத கண்களும் அவரை வெறிபார்வை பார்த்துகொண்டே இருக்கின்றது.

ஆனால் இத்தேசம் உயரவும் வாழவும் நிலைக்கவும் வழிநடத்தும் தர்மத்தின் சக்தி தோவாலை இதுகாலமும் காத்து வருகின்றது ஆலகால விஷத்தில் இருந்து உயிர்களை காக்க சிவன் அதை உண்டானாம், அப்படி இத்தேசத்தின் விஷங்களை தன்னில் எடுத்து உயிராபத்தில் இருக்கும் பரமசிவன் இந்த நாயகன்.கங்கையின் பாய்ச்சலை சிவன் தலை தவிர யார் தலையும் தாங்காதாம், அப்படி 1980களின் பிரிவினைவாத பாய்ச்சலை தனியாக தன் தலையில் வாங்கியவன் அவன் ஆனால் தர்மசக்தி அவனை காத்து நிற்கின்றது, அது எக்காலமும் தாங்கும், காக்கும் குருஷேத்திரத்தில் அர்ஜூனனை காத்து நின்ற கண்ணனும் அனுமனும் போன்ற‌ தெய்வ சக்திகளெல்லாம் இந்த நாயகனை காத்து நிற்கட்டும் இத்தேசத்தின் மாவீரனுக்கு, இந்தியாவின் காவலனுக்கு, நல்லோர் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவனுக்கெதிரான கனைகளும் திட்டங்களும் எக்காலம் போல் பொய்க்கட்டும், அந்த பெருமகனின் நுட்பமான திட்டத்தில் நாடு வாழட்டும் நாம் கிருஷ்ண பரமாத்மாவின் வடிவமாகவே அவனை காண்கின்றோம், இந்த கண்ணனுக்கு மோடி எக்காலமும் துணையிருக்கட்டும், மோடிக்கு தேசம் எக்காலமும் பலமாய் இருக்கட்டும்

இந்த தேசத்தின் மொத்த மனமும், வாழ்ந்த ஆத்மாக்களும், வல்ல தெய்வங்களும், மூல பரம்பொருளும் அவனை வாழ்த்துகின்றது. இப்பொழுது பஞ்சாப் விவசாயிகள் பிரச்சினையினை மிக பெரிதாக்கி அதன் மூலம் மோடி அரசை சரிக்கவும் முடிந்தால் மோடியினையே சரிக்கவும் திட்டமிட்ட உலகளாவிய சதிகளை முறியடித்தவர் அஜித்தோவல்தான்.

சமீபத்தில் மோடி பஞ்சாபில் உயிர்தப்பியதும் அஜித்தோவலின் சாமார்த்தியமான நடவடிக்கைகளாலே இப்பொழுதும் குடியரசு விழாவில் மோடி உயிருக்கு ஆபத்து என பெரும் சதி முன்னறிவிக்கபட்டிருப்பது அவரின் துப்பறியும் விஷயங்களாலே.

நேபாளத்தில் இந்தியாவின் பிடி, பர்மா இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் மொரிஷியஸ் ஆப்ரிக்க நாடுகளில் இந்தியாவின் தளம், ஈரானில் இந்திய பிடி இன்னும் கிழக்காசிய நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் ஐரோப்பாவில் அமெரிக்காவில் என இந்தியாவின் கண்கள் எங்கும் உலாவ அவர்தான் காரணம் பாகிஸ்தானில் தோவல்  பின்னிய வலைதான் இன்று தாவுத் இல்லாமல் செய்யபட்டு பலர் அமைதியாக்கபட்டிருகின்றனர்.

ஆப்கன் தாலிபன் கைகளுக்கு சென்றாலும் இந்திய எல்லையில் ஒரு அமைதி நீடிக்க தோவல் பெரும் காரணம் இப்பொழுது இந்தியா உலகின் சக்திவாய்ந்த "ஐந்து கண்கள்" உளவு அமைப்பு எனும் வல்லரசுகளின் உளவு அமைப்போடு சேர்ந்திருப்பதும், அதன் மூலம் உலகளாவிய நகர்கவுள் இந்தியாவுக்கு உடனுக்குடன் தெரிவது அவராலே இப்பொழுது தமிழகத்திலும் ஓசைபடாமல் சில காரியங்கள் நடப்பதை உணரலாம், தமிழக குழப்பங்களுக்கு பின்னால் இருப்பதுயார்? நிதி வழங்குவது யார்? திட்டமிட்டு இந்திய தேசியத்தை இங்கு தகர்க்க நினைப்பது யார் எனும் விஷயமெல்லாம் மெல்ல மெல்ல வெளிவருவதை உணரலாம்

பல தேசவிரோத குரல்கள் மெல்ல மெல்ல அடங்குவதையும் பல மர்ம சக்திகள் மெல்ல தங்கள் முகமூடிகளை கழற்றுவதையும் உணரலாம் இதெல்லாம் அந்த மாயாவி அஜித்தோவலின் காரியங்கள், அவராலே லட்சதீவு முதல் பல இடங்கள் சுத்தமாகின்றன, இதுவரை தென்னகத்தில் நடக்காத காரியங்களெல்லாம் நடக்கின்றன சிக்காத முதலைகளெல்லாம் சிக்குகின்றன‌.

அந்த மாயாவிக்கு, பாரதத்தை காக்க வந்த பரந்தாமனின் பேரருளின் மானிட வடிவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 77 வயதில் சுமார் 53 வருடங்கள் பாதுகாப்பு பணியில் நீடித்துகொண்டிருக்கும் அந்த சாதனை சாதாரணம் அல்ல, இன்னொருவனுக்கு இந்த அபார உழைப்பும் அர்பணிப்பும் சாத்தியமில்லை, வாழ்க நீ எம்மான் தேசம் வலுவுற வாழ்வதற்கே என குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.