Tamilnadu

டெல்லிக்கு அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்..?. அதையே செயல்படுத்த டெல்லி தலைமை உத்தரவு !

annamalai , ops ,eps
annamalai , ops ,eps

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்வோம் என செய்தியாளர்கள் கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ்  கருத்து தவறு எனவும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்து வருகின்றனர் .


அந்த வகையில் அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக உள்ள ஜே.சி.டி.பிரபாகர் இன்று (புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக, தலைமைக் கழக நிர்வாகிகள் ஒன்றுகூடித்தான் முடிவை எடுப்பார்கள் என்றுதான் ஓபிஎஸ் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் கட்சி. ஓபிஎஸ் கூறியதில் தவறு இல்லை.

ஓபிஎஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கே.பி.முனிசாமியின் கருத்தால் தென் மாவட்டங்களில் சிலர் வேதனையடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.சசிகலாவைச் சேர்ப்பது குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் தொடர் செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் சசிகலாவைச் சேர்க்கக் கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணாமாக இருதரப்புக்கும் இடையே சமீப நாட்களாக கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்த சூழலில் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தமிழகத்தில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் அக்கட்சியின் டெல்லி தலைமை கருத்து கேட்டுள்ளது .

அப்போது ஒரு சிலர் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தீர்வு காண்பது கூட்டணிக்கு நல்லது எனவும் , அவ்வாறு தீர்வு கண்டால் எதிர்வரும் நகராட்சி தேர்தலில் கைகொடுக்கும் என கூறியுள்ளனர் , அதே நேரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்திற்கு டேட்டாவுடன் தகவல் தெரிவித்து இருப்பதாகவும் , அதிமுக விவகாரத்தில் தலையிட்டு நமக்கு எந்த வித அரசியல் லாபமும் இல்லை , தேர்தலுக்கு முன்னர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முனுசாமி பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தவறாக பேசினார் .

நாம் கேட்ட சீட்கள் நாடாளுமன்றத்தின் போதும் கிடைக்கவில்லை , சட்டமன்ற தேர்தலின் போதும் கிடைக்கவில்லை , கொள்கை ரீதியாக நமக்கான களத்தை  ஆளும்கட்சியாக இருந்த அதிமுக செய்யவில்லை அவர்கள்  கட்சி தலைமை அவர்களை காப்பற்றி கொள்ளவே பாஜகவை பயன்படுத்தி கொண்டார்கள் , இப்போதும் அவர்களின் தேவைக்காக மட்டுமே பாஜகவை பயன்படுத்தி கொள்ள பார்க்கிறார்கள்  , 

தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் அதிமுக விவகாரத்தில்  தலையிடாமல் இருப்பதே நல்லது எனவும் பல்வேறு டேட்டாவுடன் தனது கருத்தை டெல்லிக்கு அறிக்கையாக கொடுத்துள்ளார் அண்ணாமலை என கூறபடுகிறது . இதையடுத்து அதிமுக விவகாரத்தில் முன்பை போல பாஜகவின் ரோல் இருக்காது எனவும் எடப்பாடி பழனிசாமி அணியினரின் செயல்பாடு பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது .