Cinema

ஒருவழியாக ஆவியை பிடித்துவிட்டார்கள் ..சினிமாவை மிஞ்சிய சம்பவம் !

drama
drama

சினிமாவை மிஞ்சும் வகையில் நிஜ வாழ்க்கையில் சுவாரஸ்ய சம்பவங்கள் திருப்பங்கள் அரங்கேறுவது அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள் , ஆனால் நம்பிக்கையின் பெயரால் ஒரு சில தனி மனிதர்கள் செய்யும் செயல்கள் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அமைந்து இருப்பதுடன் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகிறது .


அந்த வகையில் தற்போது இணையத்தில் யூடுப் சேனல் ஒன்று வெள்ளை நிற பேண்ட் ஷர்ட் அணிந்த ஒருவர் , நம்பிக்கையின் பெயரால் பேய் ஓட்டுவது போன்ற காட்சியை ட்ரோல் செய்து வெளியிட்டுள்ளது , இந்த காட்சிகள் அனைத்தும் செயற்கையாக அல்லது நம்பிக்கையை பயன்படுத்தி ஏமாற்றுதல் போன்ற செயலாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

ஆண்களை வரிசையாக நிற்க வைத்து ஒருவரை ஒருவர் கையை பிடிக்க வைக்கிறார் அந்த வெள்ளை ஆடை அணிந்த நபர் , ஒருவர் கையில் மட்டும் இவரது கையை வைத்து தொடுகிறார் உடனே அனைவரும் கரண்ட் ஷாக் அடித்தது போன்று அங்கும் இங்கும் குதிக்கின்றனர் , இது பார்ப்போரை நடப்பது பிராத்தனை கூட்டமா ? அல்லது மேஜிக் கூட்டமா என்று யோசிக்க வைத்துள்ளது .

அதற்கு முன்னர் வெள்ளை சேலை அணிந்த பெண் ஒருவர் பேய் வந்ததுபோல் ஆட அவரை அடக்க டிஸ்யும் என அந்த வெள்ளை சட்டை அணிந்த நபர் சத்தம் கொடுக்க ஒரு வழியாக ஆவியை  பிடித்துவிட்டார்கள் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்துஉள்ளனர் , எதனை முறை சாப்பிட்டாலும் வயிறு நிரம்பவில்லை என இளம்பெண் ஒருவர் சொல்ல அதற்கு அந்த வெள்ளை சட்டை நபர் டிஸ்யும் மருத்துவம் போட என காமெடி காட்சிகள்  அந்த வீடியோவில் உள்ளன  . watch video clik 

மொத்தத்தில் மக்களின் நம்பிக்கையை இது போன்ற ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குவது மொத்த சமூகத்தின் மீதும் விமர்சனத்தை உண்டாக்க வழியாக அமைகிறது , வெள்ளை சட்டை அணிந்த நபர் செய்யும் மேஜிக் மருத்துவ காட்சிகளை யூடுப் சேனல்  ஒன்று ட்ரோல் செய்த வீடீயோவை பார்க்க கிளிக் செய்யவும் . பின் குறிப்பு  வீடியோக்கள்  நாங்கள் தயாரிப்பு செய்தது அல்ல யூடுப் லிங் மட்டுமே இணைத்துள்ளோம் .