Tamilnadu

பழைய பல்லவியை பாடிய ஊடகவியலாளர் பளார் பளார் என பதில் கொடுத்த அண்ணாமலை

Annamalai
Annamalai

உத்திர பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அதே பழைய வாதத்தை முன்வைத்த தனியார் ஊடகத்தை சேர்ந்த நேர்காணல் செய்தவருக்கு அண்ணாமலை நேரடியாக பதில்கள் அளித்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது இது குறித்து செல்வநாயகம் என்பவர் தொகுத்து வழங்கிய தகவல்  பின்வருமாறு :- கேள்வி :-நீங்கள் மாநிலத் தலைவராகப் பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. உங்களுடைய அனுபவம் எப்படி இருக்கிறது. நீங்கள் நினைத்த வேகத்தில் கட்சியை வளர்க்க முடிந்திருக்கிறதா?


பதில் :-இந்த ஆறு மாத காலத்தில் எங்கே இருக்க வேண்டுமென்று நினைத்தோமோ அங்கே இருக்கிறோம். எங்களுக்கென என்ன இலக்குகளை வைத்திருந்தோமோ அந்த இலக்குகளை அடைந்திருக்கிறோம். வேகமாக கட்சியை வளர்ப்பதைவிட, அடிப்படையை வலுவாக்க வேண்டுமென நினைக்கிறோம். சற்று மெதுவாகச் சென்றாலும்கூட நல்ல தலைமைப் பண்பு கொண்டவர்களை மாவட்ட மட்டத்திலும் மாநில மட்டத்திலும் உருவாக்க நினைக்கிறோம். ஆனால், விவாதங்களை உருவாக்குவதிலும் சித்தாந்த ரீதியிலும் கட்சி எங்கே இருக்க வேண்டுமென நினைத்தோமோ அங்கே இருக்கிறோம். பாஜக இந்து கட்சி என்று முத்திரை குத்த முயன்ற நிருபர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு தகுந்த பதில்களை கொடுத்துள்ளார் .

கேள்வி :- கடந்த ஏழு மாத கால தி.மு.க. அரசை எப்படி மதிப்பிடுவீர்கள்? பதில் :-முதலமைச்சரின் லட்சியங்களை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள் செயல்படவில்லை என்பது என் முதல் குற்றச்சாட்டு. அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இல்லையெனத் தோன்றுகிறது. தமிழ்நாட்டிற்கென ஒரு விஷனை அவர்களிடம் நான் பார்க்கவில்லை. எந்தத் தொழில்துறையை நோக்கி நாம் செல்லப்போகிறோம் என்பதில் தெளிவில்லை. தினப் பிரச்சனைகளிலேயே போராடிக்கொண்டிருப்பதாகத்தான் பார்க்கிறேன். தவிர, ஊழலும் ஆங்காங்கே தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. முதலமைச்சர் சில விஷயங்களைச் சொன்னாலும் அவருடைய அமைச்சரவையில் இருப்பவர்கள், அதைப் பேசாமல் வேறு எது எதையோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் மோடி எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி :-தி.மு.கவைப் பொறுத்தவரை தேர்லுக்கு முன்பாகவே பத்தாண்டுகளுக்கான லட்சியப் பாதையை வெளியிட்டிருக்கிறார்களே... பதில் :-ஆவணத்தில் சொல்வது வேறு; செயல்படுத்துவது வேறு. ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களாகவிட்ட நிலையில், அரசு எந்தத் திசையில் செல்கிறது என்பதில் நமக்கு ஒரு பார்வை கிடைத்துவிடுகிறதல்லவா..? நம்முடைய நிதி நிலை மோசமடைந்திருக்கிறது என நம்முடைய நிதியமைச்சர் ஒரு ஆவணத்தை வெளியிடுகிறார். ஆனால், அதைச் சரிசெய்ய என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து ஏதுமில்லை. தவிர, அரசே டாஸ்மாக்கிலிருந்து வரும் வருவாயைத்தான் நம்பியிருக்கிறது. இந்த ஆண்டு 33 ஆயிரம் கோடி, அடுத்த ஆண்டு 37 ஆயிரம் கோடி என போய்க்கொண்டிருக்கிறது.

கேள்வி :-கடந்த ஏழு மாத கால தி.மு.க. ஆட்சி குறித்து மக்கள் என்ன கருதுவதாக நினைக்கிறீர்கள்? பதில் :-சென்னை மழை, சில ஊழல் குற்றச்சாட்டுகள் அரசுக்கு சில கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், ஏழு மாதம் என்பது மிகவும் குறைவான காலகட்டம். அதிமுக கூட்டணி, சசிகலா பற்றிய கேள்விக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியாவுக்கு கொடுத்த அதே பதில் தான்: "கூட்டணியில் குழப்பமில்லை. சசிகலாவை பற்றி அதிமுக தான் முடிவெடுக்க வேண்டும்" என நேரடியாக சொல்லிவிட்டார்.

கேள்வி :-மாநிலத்தில் அ.தி.மு.கவின் இடத்தை பா.ஜ.க. அபகரிக்க நினைக்கிறது என்ற பார்வை இருக்கிறது. அது சரியா? பதில் :- அது சரியான பார்வையல்ல. தி.மு.கவைப் பொறுத்தவரை 33 சதவீத வாக்குகளை வாங்கி ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறது. ஆகவே 67 சதவீதம் பேர் தி.மு.கவை விரும்பவில்லை. ஆகவே நிறைய இடம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது இன்னொரு கட்சியை உடைத்து வளர வேண்டும் என்ற பார்வையே பா.ஜ.கவுக்குக் கிடையாது. எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.கவை ஏற்கச் செய்யவேண்டும் என நினைக்கிறோம். பலர் பா.ஜ.கவைப் பிடிக்கும் ஆனால், குறிப்பிட்ட சில காரணத்திற்காக வாக்களிக்க மாட்டோம் என நினைப்பார்கள். அது தப்பான கருத்து என புரியவைத்து அதனை உடைக்க நினைக்கிறோம். ஆகவே, எங்களுக்கே நிறைய ஓட்டு வெளியில் இருக்கும்போது, மற்றொரு கட்சியின் வாக்குகளை உடைத்து வளர நாங்கள் நினைக்கவில்லை.

கேள்வி :- கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. இந்த ஆட்சியை எப்படி மதிப்பிடுவீர்கள்? துணை கேள்வி :- ஆக, திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த வளர்ச்சியை ஏற்கிறீர்கள்தானே... பதில் :- கரெக்ட். 1967க்கு முன்பிருந்த வளர்ச்சியையும் பார்க்கிறேன், அதற்குப் பின்வந்த வளர்ச்சியையும் பாராட்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளின் நாம் பின்தங்க ஆரம்பித்துவிட்டோம் என்பதுதான் என்னுடைய பார்வை. உடனே நான் திராவிடத்திற்கு எதிரான அரசியலைப் பேசுவதாகச் சொல்கிறார்கள். நான் திராவிட அரசியலுக்கு எதிராகவே பேசவில்லை. நான் அடுத்த கட்ட தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகிறேன். தமிழகத்தை உத்தரபிரதேசத்தோடு ஒப்பிட முயற்சிக்கும் நபர்களுக்கு மீடியாவுக்கு தெளிவான பதில்களை கொடுத்திருக்கிறார் அண்ணாமலை, இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

credit - BBC TAMIL & SELVANAYAGAM