Tamilnadu

நீங்கள் மாரிதாஸ் மேல போடாதது அந்த ரெண்டு கேஸ் தான் வைரலாகும் பங்கம்? என்ன அந்த ரெண்டு கேஸ்!

maridhas
maridhas

சமூக வலைத்தளத்தில் தவறான பதிவு செய்ததாக கைது செய்யப்பட்ட எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யபட்ட நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகளை காரணம் காட்டி தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. இந்த சூழலில் தேசதுரோக வழக்கு மற்றும் தப்லீக் ஜமாத் வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


மேலும் தனியார் ஊடகம் குறித்த வழக்கிலும் மாரிதாசிற்கு ஜாமின் கிடைத்துள்ளது, இந்த சூழலில் பாஜகவினர் மற்றும் பிற தேசிய ஆதரவாளர்கள் மாரிதாஸ் விடுதலையை வரவேற்று இருக்கும் சூழலில் நெட்டிசங்கள் தங்கள் பங்கிற்கு தங்கள் திறமையை காட்டி வருகின்றனர். அதில் ஒரு பதிவு வைரலாக பரவி வருகிறது.

நீதிபதி ஐயா..என்ன இது? "Maridhas மேல் இனி வர இருக்கும் briefcase'களையும்suitcase'களையும் தள்ளுபடி செய்கிறேன்"ன்னு paper ல எழுதிவெச்சிருக்கீங்க? ஆமாம் தம்பி..இன்னும் அந்த ரெண்டு கேஸ மட்டும் தான் இவனுங்க அவர் மேல போடாம விட்டு வெச்சிருக்காங்க.. அதையும் முன்கூட்டியே தள்ளுபடி பண்ணிட்டா எனக்கு வேலை மிச்சம் பாரு! என இருக்கிறது.


அதாவது வேண்டும் என்றே மாரிதாஸ் மீது தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை நீக்கப்பட்ட நிலையில் அதனை காரணம் காட்டி நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். மொத்தத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்து வந்த மாரிதாசை அடுத்தடுத்து கைது நடவடிக்கை மூலம் தமிழக அரசு அரசியல் பிரபலமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல்  இந்திய அளவில் பிரபலமாக மாற்றி இருப்பது அவருக்கு வரும் ஆதரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் குரல் வலையை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மாரிதாஸ் போன்றவர்களை கைது செய்த காவல்துறை நாம்தமிழர் கட்சி மேடையில் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.