24 special

அண்ணாமலை சவால் வென்றது...! வழக்கு பதிவு செய்த தமிழக காவல்துறை பின்வாங்கியது

Annamalai
Annamalai

திமுக அரசுக்கு 24 மணி நேரம் கால அவகாசம் தருகிறேன், அதற்குள் முடிந்தால் என் மீது கை வத்துப்பாருங்கள் என தமிழக அரசை எச்சரித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விவாகரத்தில் காவல்துறை பின் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் மீது திமுக அமைச்சர்கள் சிலர் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டுகளையும், அவதுறுகளையும் பரப்பி வந்ததே வட மாநில தொழிலாளர்களுக்கு தொடர்ந்து அச்சத்தை உண்டாக்க காரணமாக பாஜக குற்றம் சுமத் தியது,

மேலும் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது பல்வேறு நகரங்களில் தொடர்ந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள பல தொழிலாளர் வீட்டில் இருந்து தங்களது மகன் மற்றும் உறவினர்களை சொந்த மாநிலத்துக்கே திரும்ப வரும் படி அவர்களது உறவினர்கள் அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக பாஜக் தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் திமுக வடமாநிலத்தவருக்கு எதிராக பரப்பும் பொய் என சில தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அண்ணாமலை மீது புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்புவதாக கூறி அவர் மீது தமிழக போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. மேலும், போலீஸார் தரப்பில் கூறியதாவது; தமிழகத்தில் வட  மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படும் வீடியோ சமூக வலையதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து பொய்யான வகையில் வதந்திகள் பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

இந்நிலையில், தமிழக அரசின் மீது டிவிட்டர் வாழிலாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை மீது கைது செய்யும் விதமாக, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொய்யான வதந்தி பரப்புதல் போன்ற 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலிஸார் வழக்கு பதிவு செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தன. மேலும், இருமாநிலத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக தவறான தகவல்களை பரப்பிய பீகார் மாநில பாஜகாவின் டிவிட்டர் கணக்கையும் முடக்க டிவிட்டர் நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தமிழக போலீஸார் கூறினர்.

இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் டிவிட்டர் வாயிலாக தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளதாவது, வட மாநிலத்தவர் குறித்து திமுக அரசு செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டுருந்தேன். அதற்காக என் மீது 4 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவரது அறிக்கையில் குறிப்பிட்டதை காணொளியாக வெளியிட்ட அண்ணாமலை திறனற்ற திமுகவுக்கு தைரியம் இருந்தால் 24 மணிநேரம் கால அவகாசம் தருகிறேன். தமிழக அரசுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால் என் மீது கை வைத்து பாருங்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்தால் அது தேசிய அளவில் எதிரொலிப்பதுடன் மத்தியில் ஆளும் அரசாங்கம் மூலம் மாநிலத்தில் ஆளும் திமுக அரசிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால், தமிழக அரசு அண்ணாமலையை கைது செய்யாமல் பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பீகார் அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஒரு வேலை அண்ணாமலை கைது செய்யபட்டால் நீதி மன்றத்தில் தமிழக அரசு மிக பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அமைதியாக கடந்து செல்கிறதாம் மாநில அரசு என்கின்றனர் அரசியல் தெரிந்தவர்கள்.