24 special

திமுக போட்ட கணக்கு தனக்கு தானே ஆப்பாக மாறிய அதிர்ச்சி தகவல்..!

stalin
stalin

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று கூட்டணியும் போச்சு... கனவும் போச்சு...!வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் பூதாகரமாக தங்களை திருப்பி தாக்கும் என திமுக நினைத்து இருக்க வாய்ப்பு இல்லை இந்த சூழலில் தமிழகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பீகார் அரசியலில் புயலை கிளப்பி இருக்கின்றன, பிகார் முழுவதும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசிற்கு எதிராகவும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அளவிற்கு பீகார் அரசியலை புரட்டி போட்டு இருக்கிறது.


இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர் ராஜ சோழன் முன்பே கருத்து தெரிவித்து இருக்கிறார் அதில்,'வடக்கன் - பானிப்பூரிக்காரன் - பீடாவாயன்னு' வெறும் வன்மத்தை மட்டுமே கக்கிக் கொண்டிருந்தன யூ டியூப் சேனல்கள்.பல தொலைகாட்சிகளிலேயே எப்போது பார்த்தாலும் வடஇந்தியர்களை பற்றி எதிர்மறைமான செய்திகளை மட்டுமே பரப்பி வந்தார்கள்..பழைய காலம் அல்ல இது.எது நடந்தாலும் உடனே இந்தியா முழுக்க பரவிவிடும்..கொஞ்சம் கூட இந்தியா முழுக்க உள்ள தமிழர்களை பற்றி கவலைப்படாமலும்,நமது பொருளாதார அடிப்படைகளை பற்றி புரியாமலும் பேசிக் கொண்டிருந்தவர்களை அரசு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்..

தற்போது இது பீஹார் சட்டமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது பிரச்சனைகள்..பீஹார் தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என பீஹார் முதல்வர் நித்திஷ் வெளிப்படையாக ட்வீட் போட்டார்.தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படவில்லை அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என டிஜிபி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது..நித்திஷ் - தேஜஸ்வி கூட்டணி அரசு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை இந்த விவகாரத்தில் சந்திக்கிற காரணத்தால்,அங்கிருந்து அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை தமிழகம் வந்து இதை விசாரிக்கும் என அறிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் இந்திய அளவில் தமிழகத்தின் மாண்பை குறைக்கும் நிகழ்வுகள்.தமிழகம் பெரிய தொழில் மாநிலம்,இங்கே குறுங்குழுக்கள் உருவாகி பிற மாநிலத்தவர்களை தாக்குகிறார்கள் என்ற பிரச்சாரம் நமது ஒட்டுமொத்த வளர்ச்சியையே கெடுக்கும்..இந்த விதத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் எல்லாம் அரசுக்கு தலைவலியாகத்தான் இருந்தார்கள்.ஆனால் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்போடு பேசியுள்ளார்.எதில் அரசியல் செய்ய வேண்டும்,செய்யக் கூடாது என்பதை இதைப் பார்த்தாவது கற்றுக் கொண்டால் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு நல்லது என குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறம் என்றால் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் பாஜகவிற்கு எதிராக திரும்பும் என திமுகவினர் கணக்கு போட்ட நிலையில் அது தற்போது திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிராக திரும்பி  இருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மூலம் தேசிய அரசியலில் பங்கு பெற்று துணை பிரதமராக வரவேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் மீதான திமுகவினர் கனவும் ஒரே நிகழ்ச்சிகள் மூலம் கனவாக மாறி இருக்கிறதாம்.