மதுக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.டெல்லியின் துணைநிலை முதல்வராக பதவி வகித்த மணிஷ் சிசோடியா 2021-2022-ஆம் ஆண்டு மதுக் கொள்கை (கலால் வரி) முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்ததாக சிசோடியாவை பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 120 (குற்றச் சதி), 477 ஏ ஏமாற்றும் நோக்கம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் கைது செய்தனர். பிறகு 5 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த சிசோடியாவை, 2 நாட்கள் கூடுதலாக விசாரிக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்ததை அடுத்து, மேலும் அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்திரவிட்டது.
இந்நிலையில், தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வந்த சிபிஐ அதிகாரிகளின் விசாரனை காலம் இன்று பிற்பகல் முடிவடைந்ததையடுத்து, மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளதாவது, சிசோடியா சரியான முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காலம் தாழ்த்தி தப்பித்துக் கொண்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவரது மருத்துவப் பரிசோதனை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஜாமின் மனு மீதான விசாரனையின் பேரில் அவர் அதிகமான நேரத்தை எடுத்துகொண்டு விசாரனைக்கு ஒத்துழைக்காமல் இருந்தார் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பின் கோரிக்கைகளை ஏற்று உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி எம். கே. நாக்பால், மணிஷ் சிசோடியாவை மார்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, சிசோடியாவை திகார் சிறை எண் 1-இல் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சிசோடியா தரப்பில் வாதிட்டதாவது மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர்களால் பறிந்துறைக்கப்பட்ட மருந்துகளை எடுத்து செல்லவும், பகவத் கீதை மற்றும் பேனா-வை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். மேலும், வழக்கறினர் அவரை தியான அறையில் தான் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அடுத்து அதை கருத்தில் கொண்ட நீதிபதி நாக்பால் ஒரு டைரி, பேனா மற்றும் பகவத் கீதையின் நகல் ஆகியவற்றை சிசோடியா எடுத்துச் செல்ல அனுமதியளித்து உத்திரவிட்டனர். அதேபோல், அவறை தியான அறையில் வைக்க பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா சிறை சென்றதை அடுத்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மிகுந்த சோகத்தில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.