Politics

மற்றொரு உண்மை சம்பவம் வெளிவந்தது கொண்டாட்டத்தில் இறங்கிய பாஜகவினர் !!

மற்றொரு உண்மை சம்பவம் வெளிவந்தது கொண்டாட்டத்தில் இறங்கிய  பாஜகவினர் !!
மற்றொரு உண்மை சம்பவம் வெளிவந்தது கொண்டாட்டத்தில் இறங்கிய பாஜகவினர் !!

மறைந்த ஈ வெ ரா குறித்து பல்வேறு உண்மை சம்பவங்கள் நாளுக்கு நாள் வெளிவந்தவண்ணம் உள்ளன, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியாருக்கு யூனிஸ்கோ அமைப்பு அவார்டு கொடுத்தது போலி செய்தி என நிரூபணம் ஆனதுடன், அதனை தமிழக பள்ளி மாணவர்கள் பாடத்தில் இருந்து நீக்கவும் நீதிமன்றம் அவகாசம் விதித்தது.


யூனிஸ்கோ நிறுவனம் பெரியார் என்பவருக்கு எந்த அவார்டும் கொடுக்கவில்லை என வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு சென்று அவமானத்தை சந்திதார்கள் பெரியாரிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்கள், திராவிட கழக தலைவர் வீரமணி பெரியாருக்கு யூனிஸ்கோ அவார்டு வழங்கியது உண்மை என நிரூபிப்பேன் என சவால்விடுத்து தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் பெரியார் பெயரில் இத்தனை நாட்களாக ஒட்டப்பட்ட போலி ஸ்டிக்கர் ஒன்று வெளிவந்துள்ளது, சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறி பெரியாரிஸ்ட்கள் போராட்டம் நடத்தினர்,திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார் அதில் அவரது முகநூல் பதிவில், 1979ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இந்த சாலைக்கு சூட்டப்பட்ட பெயர், தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இதனை கண்டிப்பதாக தெரிவித்திருந்த ஸ்டாலின், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துவதாகவும், தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நெடுஞ்சாலை ஆணையம் கொடுத்த விளக்கத்தில் ஆடி போயுள்ளனர் பெரியாரிஸ்ட்கள் மற்றும் கண்டனம் தெரிவித்தவர்கள், உண்மையில் அந்த சாலையின் பெயர் கிராண்ட் வெஸ்டர் ட்ரங்க் ரோடு என ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இருப்பதாகவும் திமுக ஆட்சியிலும் அப்படித்தான் இருந்ததாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் மட்டுமே ஈவேரா பெரியார் சாலை என அழைக்கப்பட்டு வந்ததாக விளக்கம் அளித்துள்ளது நெடுஞ்சாலை துறை இதன் மூலம் யுனெஸ்கோ அவார்டு போன்றே பெரியார் சாலை பெயரை மாற்றியதாக ஊடகங்கள் மற்றும் திமுகவினர் வெளியிட்டது போலி செய்தி என நிரூபணமாகியுள்ளது.