Politics

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் உளவுத்துறை பரபர அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் உளவுத்துறை பரபர அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்க போவது யார் உளவுத்துறை பரபர அறிக்கை!!

தமிழக சட்டசபை பொது தேர்தல் முடிவுகள் மே2-ம் தேதி வெளியாக உள்ளன, கடந்த ஏப்ரல் 6 அன்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்று முடிந்துள்ளது, மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் காரணத்தால் அம்மாநிலத்தில் தேர்தல் நிறைவு பெற்ற பின்பு மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.


இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன, அதே போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளையும் அந்நிறுவனங்கள் சேகரித்துள்ளன, இவை ஏப்ரல் 29 ம் தேதி மாலை 7.30 மணிக்கு வெளியாக இருக்கின்றன.

அதே போல் மத்திய, மாநில உளவு துறையும் தேர்தலுக்கு முன்னும் பின்னும் நிலவரம் குறித்து சர்வே எடுத்து முடிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும், இதன் அடிப்படையில் முன்பே சில வியூகங்களை வகுக்க உதவும், அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என குறிப்பிட்டுள்ளதாம்.

அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் தனித்து ஆட்சி அமைக்க இயலாது எனவும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியில் தொடர வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, இதையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோரை பற்றிய முழு தகவலையும் டெல்லி தலைமை சேகரித்து வைக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வேலை முடிவுகள் எந்த கட்சிக்கும் சாதகமாக அமையவில்லை என்றால், எம்எல் ஏ களை தாக்கு பிடிக்க திமுக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது, ஏ வ வேலு, சபரீசன், சபரீசன் நண்பர்கள், செந்தில் பாலாஜி வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் திமுகவை ஒரு கை பார்த்துவிடலாம் என மத்தியஅரசு களத்தில் இறங்கிவிட்டதாம்.

திமுக தனித்து 95 இடங்களுக்கு மேலே வெற்றி பெறாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்ததாக ஒரு கருத்து பரவி வரும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்குமா என்பது 100% கேள்வி குறியாக மாறியுள்ளது என்பதே தற்போது மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்டாக உள்ளது.