24 special

நகை வாங்கப்போறீங்களா... உஷார்...

gold
gold

பொன் புடிக்காத பெண் இந்த உலகத்தில் இருப்பாங்களா! மாட்டாங்க... ஏன்னா பெண்ணா பிறந்த எல்லாத்துக்குமே தங்க நகைகள் பிடித்தமான ஒன்று! அதோடு ஒரு பெண்ணோட முகத்துல சிரிப்பு இருக்கோ இல்லையோ அவளோட கழுத்துல எவ்வளவு தங்க நகை இருக்கு அப்படிங்கிறத எடைப் போட்டு பார்க்கிற சமுதாயத்தில் தான் நாமும் இருக்கிறோம். அப்படி நகையை வைத்து எடை போடுகின்ற காலத்தில் நகையை வாங்கலாம் என்று வசதி படைத்தவர்கள் கடைகளுக்கு சென்றால் கூட தங்கத்தின் விலை அவர்களை நடுத்தர வர்க்கத்தை போன்றவர்களாக மாற்றி விடுகிறது. ஏனென்றால் நாளுக்கு நாள் தங்க நகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களில் தங்க நகை முக்கியமாக இடம் பெற்று இருக்கிறதா என்பது தெரியவில்லை! ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு பழக்கவழக்கங்களை பின்பற்றும் மக்களிடத்திலும் தங்கநகை என்பது ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 


இப்படி தங்க நகையை பார்த்து எடை போடும் சமூகத்தில் தன் பெண்ணை நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையில் பெற்றோர்களும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஏற்ற வகையில் தங்களது சேமிப்புகளையும் வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளும் முயற்சியும் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு வீட்டில் பெண் பிள்ளை பிறந்து விட்டால் அவள் பிறந்ததிலிருந்து அவளுக்கு வேண்டிய தங்க நகையை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள், இறுதியில் அவை அனைத்தையும் தன் பெண் போட்டு மணமேடையில் அமரும் பொழுது பெற்றோர்கள் அனைவருக்கும் அத்தனை வருடங்கள் அவர்கள் பட்டப்பாடு கண்முன்னே வந்து சென்று விடும். அதனால்தான் பெண்ணிற்கு நகை சேர்ப்பதும் பெண்ணை வளர்ப்பதும் ஒன்றுதான் என்றும் இரண்டும் நம் மனதளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த நகையிலும் தற்போது பல மோசடிகள் நடைபெறுவதாக வழக்கறிஞர் ஒருவர் தன் கட்சிக்காரருக்கு நடந்த சம்பவத்தை எடுத்துகாட்டி பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 

அதாவது நகை அடகு கடையை நடத்தி வரும் ஒருவரிடம் ஜாபர் லீ என்பவர் கடந்து சில மாதங்களுக்கு முன்பு சில நகைகளை கொடுத்து அடகு வைத்துள்ளார் அதை சோதித்து அதற்கான பணத்தை கொடுத்த பிறகு மீண்டும் அதே நபர் சில நாட்கள் கழித்து 24 கிராம் நகையை கொண்டு வந்து அடகு வைக்கிறார், பிறகும் 20 நாட்களுக்கு கழித்து 50 கிராம் நகையை எடுத்து வந்து அடகு வைக்கிறார். அந்த நகைகளை அவர்கள் செக் பண்ணி பார்க்கும் பொழுது 916 நகையாகவே தெரிந்துள்ளது . இருப்பினும், அவர் கொண்டு வந்த ஐம்பது கிராம் நகை முழுவதும் செயினாக இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது அதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் வைத்திருக்கும் இன் டெப்த் என்ற தங்க நகை சோதனை இயந்திரத்தில் இதனை கொடுத்து ஆய்வு செய்த பொழுது ஜாஃபர் லீக் கொடுத்த நகைகள் அனைத்தும் இன் டெப்த்தில் போலி என்று நிரூபணம் ஆனது. 

இதனை அடுத்து நாங்கள் என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஜாபர் லீ 200 கிராமம் நகையை அடகு வைத்து பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார் உடனடியாக நாங்கள் அவரை வரவழைத்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். ஆனால் காவல் துறையினர் சமரசம் செய்து ஒரு நாளில் பணத்தை திருப்பி தருவதாக ஜாபர் லீக் கூறியதுடன் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் புகாரை மட்டும் வாங்கிக் கொண்டு திருப்பி அனுப்பினார்கள். எனினும் இதுவரையில் எங்களுக்கு பணமும் கிடைக்கப்படவில்லை காவல்துறையினரிடம் நாங்களே குற்றவாளிகளை பிடித்து ஒப்படைத்துள்ளோம் ஆனால் அவர்களும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை அதனால் தற்போது கமிஷனரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம் என்று பகிரங்க தகவலை தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பான வழக்கறிஞர்! மேலும் இந்த செய்தி, போலிகள் அடங்கிய உலகத்தில் தங்க நகையும் தற்போது போலியாக மாற்றி விற்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது தன் பெண்ணிற்காக நகை சேர்த்து வரும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது