Tamilnadu

தலைவரோட அடுத்த சம்பவத்துக்கு தயாரான நெல்சன்...

rajinikanth  ,nelson
rajinikanth ,nelson

எப்படி தற்போது சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர்கள் வெள்ளி திரைக்கு வந்து சாதனை படைக்கிறார்களோ, அந்த வரிசையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் உதவி ஸ்கிரிப்ட் ரைடர் ஆக தனது வாழ்க்கை தொடங்கிய நெல்சன் திலிப் குமார் தற்போது ஒரு வெற்றிகர இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்துள்ளார். எங்கு இவர் தனது திரை உலக பயணத்தை இயக்குனராக ஆரம்பித்தார் என்றால் 2010ல் வேட்டை மன்னன் என்ற ஒரு படத்தை இயக்க ஆரம்பித்து அந்த படத்தில் சிலம்பரசன், ஜெய், ஹன்சிகா போன்றவர்களை வைத்து யுவன் சங்கர் ராஜா இசையிலும் எடுக்க திட்டமிட்டிருந்தார் நெல்சன் திலிக்குமார் இருப்பினும் அந்த படம் கிடப்பிலே கிடந்தது அதற்குப் பிறகு 2017 இசையமைப்பாளர் அனிருத் குழுவுடன் இந்த படம் மீண்டும் எடுக்கப்பட இருந்தது. ஆனால் பல காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு தனது முதல் படமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கி வெற்றிகண்டார் நெல்சன்! அதிலும் குறிப்பாக பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பெண்கள் கதாநாயகிகளாக இடம்பெறும் கதைகளை தேர்ந்தெடுத்து வந்த நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா திரைப்படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. 


இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அனிருத் இசையில் டாக்டர் திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தையும் இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார், எப்படி நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா ஒரு நல்ல மாற்றத்தை கொடுத்ததோ அதேபோன்று சிவகார்த்திகேயனுக்கும் டாக்டர் திரைப்படம் ஒரு நல்ல மாற்றத்தையும் திருப்புமுனையையும் கொடுத்தது. இப்படி தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த  நெல்சன் மூன்றாவதாக தனது இயக்கத்தில் இளைய தளபதி விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெறவில்லை மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. இதனால் நெல்சன் சில பொது நிகழ்ச்சிகளில் நிராகரிக்கப்பட்டதும் தனித்துவிடப்பட்ட செய்திகளும் இணையங்களில் வைரலானது. இருப்பினும் அந்த நேரத்தில் நெல்சன் தனது முயற்சியை கைவிடாமல் மற்றுமொரு கதையை உருவாக்கி தமிழ் திரையின் ஜாம்பவானாக உள்ள சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். விஜயின் பீஸ்ட் படம் தோல்வியை கொடுத்த காரணத்தினால் சூப்பர் ஸ்டாரை வைத்து அவர் இயக்கி வந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் சற்று கம்மியாகவே இருந்தது. ஆனால் அவற்றை இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் எதிர்பார்ப்பில் திளைக்க வைத்தார். 

அதற்குப் பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது அதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ஜெய்லர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டது. மேலும் தர்பார் அண்ணாத்த என்று வரிசையாக நல்ல வரவேற்பை பெறாத சூப்பர் ஸ்டார் படங்கள் வரிசையில் ஜெய்லர் திரைப்படம் ரஜினி ரசிகர்களால் போற்றப்பட்டது, கொண்டாடப்பட்டது அப்படிப்பட்ட ஒரு மாசான லுக்கை ரஜினிக்கு கொடுத்திருந்தார் நெல்சன்! இதுவரை பார்க்காத ஒரு சூப்பர் ஸ்டாரை இந்த படத்தில் பார்த்தோம் என்று அனைத்து திரையுலக பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் நெல்சன் திலிப் குமாரை கொண்டாடி தீர்த்தனர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ்சின் கிங்காக மாறினார் சூப்பர் ஸ்டார்! 

இந்த நிலையில் சமூக வலைதளம் முழுவதும் ஜெயிலர் பாகம் 2 திரைப்படம் வெளியாகும் விரைவில் அப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று பதிவுகள் இடப்பட்டது. இதனால் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்த இயக்குனர் நெல்சனிடம் ஜெய்லர் இரண்டு திரைப்படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது அதை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு இதுபோன்று பல தகவல்கள் வரும் இப்போதைக்கு அதுவா அது இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒரு தகவல் வெளியாகும் என்று கூறி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸை கிளப்பியுள்ளார்