Tamilnadu

நீங்க 10 ஆவது பாஸா? சீக்கிரம் ஓடுங்க .. போஸ்ட் ஆபிசில் வேலை காத்திருக்கு ..! 2 நாள் தான் டைம்!

post office
post office

அஞ்சல் துறையில் பல்வேறு சிறப்பம்சங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நம்முடைய ஏடிஎம் கார்டு மூலம் வீட்டில் இருந்தபடியே குறைந்த அளவில் பணத்தை எடுத்துக் கொள்ளும் முறையும் இருக்கின்றது. கிராமப்புறங்களில் இத்திட்டத்தை பயன்படுத்தி பல்வேறு நபர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனை மேலும் விரிவு படுத்தும் விதமாக தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 501 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு பணியில் எப்படியாவது வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. அதன்படி 488 போஸ்ட்மேன் மற்றும் 13 அலுவலர் பணி என 501 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20ஆம் தேதி கடைசி நாள்.

சிறப்பம்சங்கள் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி.தமிழ் வழியில் படித்து இருக்க வேண்டும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் , 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் ,எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ஐம்பத்தி ஐந்து வயது வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மண்டல அலுவலகங்களுக்கு வருகிற 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் வைப்பது நல்லது. தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு நடைபெறும் பேப்பர் 1 மற்றும் 2 நவம்பர் 11 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும் இரண்டாம் தாள் 11 .45 முதல் 12 .45 வரையிலும் நடைபெறும். இந்தத் தேர்வானது சென்னை மதுரை கோவை மற்றும் திருச்சியில் உள்ள மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுக்கு: https://tamilnadupost.nic.in/Documents/2021/Oct-2021/