இது வரை டெபாசிட் தொகை எவ்வளவு என்று அறிக்கை வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த நகையை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, 1977 முதல் நகைகள் உருக்குவதாக சொல்லப்படுகிறது என்றாலும் இது வரை டெபாசிட் செய்த நகை மற்றும் தொகை எவ்வளவு என்று அறிக்கை வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை யாத்திரை தொடங்கி உள்ளோம். அந்த வகையில் சென்னை பார்த்த சாரதி கோவிலில் தொடங்கிய யாத்திரை திருச்சி, வேலூர், மதுரை என தொடர உள்ளோம். மேலும் வரும் 26 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்... இந்த அரசாங்கம் பெரிய அளவில் திட்டமிடுகிறது. அதாவது கடந்த 2015 ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ஒன்று இருக்கின்றது.அதில் கடந்த 60 ஆண்டுகளாக எந்த கோயிலுக்கு எவ்வளவு நகை இருக்கின்றது என கணக்கு வேண்டும். இதனை ஆடிட் செய்து ஒப்படைக்க ஆணையிட்ட்டது.ஏற்கனவே 50 ஆயிரம் ஏக்கர் அரசு நிலங்கள் காணவில்லை என அரசாங்கமே சொல்லி இருக்கிறது. இன்னும் பல இடங்களில் கோவிலே காணவில்லை.
நிலைமை இப்படி இருக்க, இந்த அரசாங்கம் கோவில் நகைகளை உருக்க வேண்டும் என ஏன் இவ்வளவு முனைப்பு காண்பிக்கிறது. இதற்கு முன்னதாக பழனி கோவிலில் கடன் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்ட 10 கிலோ தங்க நகை கணக்கில் வரவில்லை என அப்போதைய ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்திருக்கிறார். தற்போது அதுவும் வழக்கில் இருக்கிறது.
1977 இல் இருந்து தங்க நகைகளை உருக்கி வருவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை எவ்வளவு நகைகளை உருக்கி உள்ளீர்கள்? எங்கு டெபாசிட் செய்து இருக்கிறீர்கள் ? வரவு செலவு எவ்வளவு ஆகி உள்ளது? இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என ஹிந்து முன்னணி தலைவர் காலேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். கோவில் நகைகளை உருக்குவதில் அதில் பெரிய ஊழல் மறைந்திருக்கிறது.
மறைந்திருக்கும் சர்வதேச சதி !எப்படி ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஊடுருவினார்களோ, அதேபோல் பங்களாதேசை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருக்கின்றார்கள். குறிப்பாக திருப்பூரில் 15 ஆயிரம் பேர் இருக்கின்றனர். தமிழக உளவுத்துறை இதனை கண்டுபிடித்து அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதற்குப்பின் சர்வதேச சதி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது தமிழகத்தில் பெரும் கலவரத்தைத் தூண்ட ஒரு சிலர் திட்டமிட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார். வங்கதேசத்தவர் எண்ணிக்கை நாளைக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக அரசிற்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது .