24 special

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அர்ஜுன் சம்பத் மீது செருப்பு வீசுவதா..? என்ன கொடுமை இது ?

Arjun sampath
Arjun sampath

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி. சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. 


இந்து மக்கள் கட்சி சார்பில் நிர்வாகி அருண்குமார் பட்டினப்பாக்கம் போலீசுக்கு கொடுத்த உத்தரவாத கடிதம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த கடிதத்தில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்த மாட்டோம், தனி நபருக்கு எதிரான கோஷங்களோ, அம்பேத்கர் சிலைக்கு காவி உடைய காவி துண்டோ போட மாட்டோம், விபூதி மற்றும் குங்குமம் வைக்க மாட்டோம் என்றும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால்,

அர்ஜுன் சம்பத் உட்பட ஐந்து பேருக்கு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி வழங்கி ஐகோர்ட் நீதிபதி அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், 

ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அர்ஜுன் சம்பத் வந்த பொழுது அங்கு காத்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தலைமையில் உள்ளவர்கள் அர்ஜுன் சம்பத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து , உள்ளே நுழையக்கூடாது. அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தக் கூடாது என்று தடுத்து கோஷமிட்டனர். 

உடனே அர்ஜுன் சம்பத்தும் இதை கண்டித்து சிலைக்கு கீழே உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு விசிக கட்சியினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும், வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அர்ஜுன் சம்பத் மீது தண்ணீர் பாட்டில்கள், செருப்புகள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு போலீசார் அர்ஜுன் சம்பத்தை பாதுகாப்பாக ஐகோர்ட் வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது கைது செய்துனர். 

Gokulakrishnan S