24 special

கல்வி நிறுவனங்கள் டூ கொடையாளர் வரை; யார் இந்த ஆற்றல் அசோக்குமார்!


நடுத்தர குடும்பத்தில் சாமானிய மனிதனாக பிறந்திருந்தாலும் இன்று தனது உழைப்பால் முன்னணி தொழிலதிபராகவும், கல்வியாளராகவும் உருவெடுத்துள்ள ஆற்றல் அசோக் குமார் பற்றிய அறிந்து கொள்ளுவோம்... 


ஆரம்ப கட்ட வாழ்க்கை: 1970ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி ஆறுமுகம், சௌந்திரம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் தான் அசோக்குமார். பெற்றோர் இருவருமே பேராசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவருடைய அப்பா அரசு கலைக் கல்லூரியில் கணித பேராசிரியராகவும், அம்மா கொங்குநாடு கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளனர். 

குறிப்பாக இவரது தாயார் சௌந்திரம்.கே.எஸ். 1991ம் ஆண்டு திருச்செங்கோடு நாடாளுமன்ற எம்.பியாகவும்.


கல்வி மற்றும் வேலை அனுபவம்: கோவையில் உள்ள அரசு உதவி பெறும் மணி மேல்நிலைப் பள்ளியில் படித்த அசோக் குமார், அங்குள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார். அதன் பின்னர் அமெரிக்காவின் கென்டக்கியில் அமைந்துள்ள எம்.எஸ். லூயிஸ்வில்லி பல்கலைக்கழகத்தில் எம்.எஸும், அமெரிக்காவில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றார். 

பெற்றோர் பேராசிரியர் என்பதால் பள்ளிக்காலம் முதலே படிப்பில் முதன்மையாக வலம் வந்த அசோக்குமாருக்கு அமெரிக்காவில் படித்து முடித்ததும் அங்கேயே வேலை கிடைத்தது. இன்று வரை இந்திய இளைஞர்களின் கனவு நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை ரிஜினல் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றியுள்ளார். 


அதன் பின்னர் இன்டெல் கார்ப்பரேஷனில் பிசினஸ் டெவலப்மெண்ட் மேனேஜராக 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் சேல்ஸ் அனலிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். 

பிசினஸ் டூ கல்வி தந்தை: கல்வி தான் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை உறுதியாக நம்பும் அசோக் குமார், தான் பிறந்த தமிழகத்தில் உள்ள மாணவர்கள் குறைவான செலவில், தரமான கல்வியைக் கற்ற பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். முதன் முறையாக 2006ம் ஆண்டு ‘இந்தியன் பப்ளிக் பள்ளி’ நிறுவினார். இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வருகின்றனர். 

2012ம் ஆண்டு ‘தி டிப்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட்’ கல்வி நிறுவனம், மாணவர்களை ப்ரொஃபஷனல்களாக மாற்றத் தேவையான அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் கோர்ஸ்களை நடத்தி வருகிறது. 

படித்து முடித்த இளம் தலைமுறையினர் பாதை மாறாமல் இருக்கவும், சிறந்த தொழில் முனைவோராக உருவாகவும் தேவையான சர்வதேச தரம் வாய்ந்த படிப்புகள் இங்கு கற்றுத் தரப்படுகிறது. 

2018ம் ஆண்டு ‘டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்சர்’ என்ற கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு தொடர்பான கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இங்கு நவீன கட்டிடக்கலை மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, கலாச்சாரத்தை சீர்குலைக்காத, அழகியல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்ட கட்டுமானம் குறித்தும், அதிநவீன தொழில்நுட்பத்தை பற்றியும் கற்றுத்தரப்படுகிறது. 

அதே ஆண்டு, ‘டிப்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்’ ஏஐசிடிஇ, புது தில்லி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்லூரி மூலமாக, தலைசிறந்த நிறுவனங்களுக்கான தலைமை அதிகாரிகளை உருவாகக்கூடிய 2 ஆண்டு எம்பிஏ பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள டிப்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குறைந்த செலவில் நிறைவான கல்வி அறிவை பெறுவதற்கு ஏற்ற பல்வேறு இளங்கலை பட்டப்பிரிவுகள் உள்ளன. 3 ஸ்டார் ஓட்டல் ரேஞ்சுக்கு தங்கும் விடுதியும், உணவும் அமையப்பெற்றுள்ளது இந்த கல்லூரியின் தனிச்சிறப்பு என்று தான் குறிப்பிட வேண்டும். 

தொழிலில் கூட சமூக நலன்: பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கு, ஆனால் அதைக் கூட நாட்டின் நலனுக்காக செய்ய வேண்டும் என்ற சிந்தனையால் 2004ம் ஆண்டு, ‘அமெக்ஸ் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். காஸ்ட் அயர்ன் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தை சுற்றுச்சூழலுக்கு மாசற்றதாகவும் மாற்ற வேண்டும் என முடிவு செய்த அசோக் குமார், சூரிய மற்றும் காற்றாலை மின் சக்தி மூலமாக இயங்கும் படி தனது தொழிற்சாலையை வடிவமைத்துள்ளார். 

ஆற்றல் அறக்கட்டளை: ‘கற்ற கல்வியும், பெற்ற செல்வமும்’ தனது தாய் திருநாட்டிற்கு பயன்பட வேண்டும் என நினைத்த அசோக் குமார், 2021ம் ஆண்டு ‘ஆற்றல் பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நிறுவினார். ‘நாட்டிற்கான நாளைய தலைவர்களை இன்றைய பிள்ளை செல்வங்களுக்கு இடையே தேட வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட அசோக் குமார், கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு வகையான சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

கிராமப்புற மாணவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குதல், பராமரிப்பற்ற மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை புனரமைத்தல், படித்து முடித்த கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார். மேலும் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 

விருதுகள்: விருதுகள் 2020ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இந்தியா ஆற்றல் அசோக்குமாருக்கு “High Performing Human Asset” என்ற விருதினை வழங்கி கெளரவித்துள்ளது. பள்ளி முதல் கல்லூரி வரை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அசோக்குமாருக்கு ‘எட்ப்ரீனர்’ என்ற விருதினை 2020ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வழங்கியுள்ளது. இதே அமைப்பு 2021ம் ஆண்டு ‘தொலைநோக்கு தலைவர்’ என்ற விருதினையும் ஆற்றல் அசோக்குமாருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. இந்திய சாதனையாளர் மன்றத்தால் 2021 ஆம் ஆண்டுக்கான ‘இந்திய சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபவுண்டரிமேன் அமைப்பு 2006 ஆம் ஆண்டுக்கான "சிறந்த ஃபவுண்டரி" விருதினை வழங்கியுள்ளது. 2020-21 ம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க இளம் தலைவர்கள் பட்டியலில், ஆற்றல் அசோக்குமார் இடம் பிடித்துள்ளார். 

கிராமப்புறக் கல்வி மேம்பாட்டில் சிறந்த சேவையாற்றியதற்காக ஆற்றல் பவுண்டேஷனுக்கு 2021ம் ஆண்டு விகடனின்  ‘பினாக்கிள் விருது’ மற்றும் ‘டைம்ஸ் எஜுகேஷன் ஐகான்ஸ் 2021-22’ விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருதுகளை தொடர்ந்து 5 முறை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பெற்றுள்ளது.