Tamilnadu

சற்றுமுன் பரபரப்பு "திருப்பம்" "சர்ச்"-ஐ சுட்டி காட்டிய அஸ்வத்தாமன் பின்வாங்கியது அரசு !!

Asuvathaman
Asuvathaman

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரு கோவில்களை இடிக்க போவதாக அரசு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் அசுவதாமன் இதுகுறித்து நேற்று கூறியதாவது:


போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைந்துள்ள இரு கோவில்களை அரசு நிலத்தில் அமைந்துள்ளது என்ற காரணம் கூறி இடிப்பதற்கு தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதுமட்டுமின்றி தமிழகத்தில் பல இடங்களிலும் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது மக்கள் பிரார்த்தனை செய்த அம்மன் கோவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தது.உயர்நீதிமன்ற வளாகம் எதிரே ஆலமரத்தடியிலும் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அந்த இரு கோவில்களாலும் யாருக்கும் எந்த இடைஞ்சலும் கிடையாது. ஆனாலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவ்விரு கோவில்களும் இடிக்கப்பட்டன.

அந்த கோவில்களை சுற்றி பலரின் வாழ்வாதாரம் இருந்தது. கோவில்களை நம்பி பிழைப்பு நடத்தியோர் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். தற்போது அந்த இடத்தில் சிறு பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். அதற்கும் அதிகாரிகள் தடை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல கோவையில் இருந்த பல கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

இது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அரசு நிலங்களில் இருப்பதாக கூறி வழிபாட்டு தலங்களை அகற்றுகின்றனர். ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை.ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இந்து கோவில்களை மட்டுமே திட்டமிட்டு தகர்க்கின்றனர். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு சர்ச் தொடர்பான வழக்கில் தமிழக அரசு 'அந்த சர்ச் நுாறு ஆண்டுகளுக்கும் மேலானது. அதனால் இடிக்க தேவையில்லை' என கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

கலெக்டர் அலுவலகம் முதல் கழிவறை கட்டுவது வரை அத்தனை காரியங்களுக்கும் கோவில் இடத்தை எடுத்து கொள்ளும் மாநில அரசு அரசு நிலத்தின் ஒரு சிறு பகுதியில் ஹிந்து கோவில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை. கோர்ட்டில் அனுமதி பெற்று உடனே இடித்து விடுகின்றனர்.கோவில் சொத்தை எடுத்து அரசு அலுவலகம் கட்டும் அரசு சிறு கோவில்களுக்காக அரசு சொத்தை விட்டுக் கொடுக்காதா?

இந்து கோவில் ஆக்கிரமிப்பு என்றால் அதை உடனே அரசு இடிக்கிறது. அதே நடைமுறையை சர்ச்சுகளுக்கும் பின்பற்றாதது ஏன்?சிதம்பரம் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் கோவில்களை தமிழக அரசிடம் இருந்து காப்பாற்ற பா.ஜ. சார்பில் போராட உள்ளோம். கோவில்களை இடிப்பதாக கூறப்படும் நாளை பா.ஜ., சார்பில் நடக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். என அவர் குறிப்பிட்டார்.

இந்த சூழலில் கோவிலை இடிக்க போவதில்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது அத்துடன் 9 மாதம் இது குறித்து பேசவும் அவகாசம் அளிக்கபட்டுள்ளது என  ஊர் மக்களுடன் நடந்த ஆலோசனையின் முடிவில் அரசு தெரிவித்துள்ளது.

100 ஆண்டு பழமையான சர்ச் இடிக்க படாது என சொன்ன அரசாங்கம் எங்கள் கோவிலை எப்படி இடிக்கலாம் இது மத விரோத போக்கு இல்லையா என எழுந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாததால் அரசு திடீர் என தங்கள் முடிவில் பின்வங்கியதாக கூறப்படுகிறது.