சாணக்கியா யூடுப் பக்கம் ஹேக் செய்யபட்டு முடக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் கல்வியாளர் டாக்டர் காயத்திரி கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ரங்கராஜ் பாண்டே நடத்திவரும் யூடுப் சேனலான சேனக்யா யூடுப் பக்கத்தில் முடக்கப்பட்டு இருப்பது பரபரப்ப உண்டாக்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் பாண்டே தனியார் ஊடகத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தனியாக, தனது கருத்தை எடுத்து கூறவும், பிரபல ஊடகங்களில் விடுபட்ட செய்திகளை எடுத்து கூறவும் புதிதாக சேனக்யா என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் சேனல் ஒன்றை தொடங்கினார்.
அவரது சேனல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வளர்ச்சி அடைந்து வந்தது 500k பின் தொடர்பவர்களை கடந்து 1 மில்லியன் இலக்கை நோக்கி வேகமாக வளர்ந்து வந்தது சேனக்யா , இந்தநிலையில் அதிகாலை 2 மணிக்கு சேனக்யா யூடுப் சேனல் வீடியோக்கள் ஏதும் வெளிவரவில்லை, அதே நேரத்தில் சாணக்யா சேனலும் யூடுப் பட்டியலில் இல்லை.
இந்த நிலையில் பாண்டே தனது சமூகவலைத்தள பக்கத்தில் சாணக்யா யூடுப் பக்கம் ஹேக் செய்யபட்டு இருப்பதாகவும் மேலும் முகநூல் இன்னும் பிற பக்கங்கள் வழக்கம் போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார், இந்த சூழலில், கல்வியாளர் டாக்டர் காயத்திரி சானக்யா பக்கம் முடக்கபட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நெஞ்சுரத்தை பற்றி பேசும் திராவிட தன் மான சிங்கங்கள் நேரிடையான கருத்து மோதலுக்கு பயந்து சமூக வலைத்தளத்தை கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதுவே அவர்கள் தோல்வியின் முதல் படி என கடுமையாக சாடியுள்ளார்.
நேரடியாக பாண்டேவை எதிர்க்க துணிவில்லாதவர்கள், குறுக்கு வழியில் இது போன்று முயல்வதாக கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் கல்வியாளர் காயத்திரி.