24 special

உதய்ணா சவால் விட்ட அதே நேரத்தில் உதய்ணா நண்பரை அலுவலகத்தில் உட்கார வைத்த அமலாக்கத்துறை...!

Udhayanidhi,gowthama sikamani
Udhayanidhi,gowthama sikamani

'வந்து பார் தொட்டு பார்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்ட அதே நேரத்தில் அமலாக்கத்துறை செய்த சம்பவம்...! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்!கடந்த சில தினங்களாக தமிழகத்தின் தலைப்புச் செய்திகளில் அமலாக்கத்துறை ரெய்டு தான் இடம் பெறுகிறது, ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை இறங்கியது அதன் பின்னர் செந்தில்பாலாஜியின் இலாகா பறிபோனது, பின்னர் செந்தில்பாலாஜியின் கோவை மண்டல பொறுப்பாளர் பதவி போய்  தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கும் வரைக்கும் சென்றுள்ளது. 


அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனிமவளத்துறை அமைச்சராக இருக்கும் பொழுது பொன்முடி செய்த அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் இறங்கி அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. கூடவே அவரது மகனுக்கு நெருக்கமான உறவினர்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கியது. 

இந்த ரெய்டின் முடிவில் வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாட்டு கார்கள், பல முக்கிய ஆவணங்கள், ஹவாலா மோசடி செய்த கோப்புகள் உள்ளிட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறை கைக்கு சிக்கியது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியை அமலாக்கத்துறை நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்து வருகிறது. 

ஏற்கனவே தினமும் 6 மணி நேரம் அமலாக்கத்துறை வசம் விசாரணையில் இருக்கும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகிய இருவரையும் இன்னும் பல விசாரணைக்கு அமலாக்கத்துறையினர் அழைக்க வாய்ப்பிருப்பதாகவும் இது இப்போதைக்கு முடியாது என தகவல்கள் கிடைத்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர், திருவண்ண்ணாமலை என கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். எப்போதும் கலகலப்பாக பேசும் அமைச்சர் உதயநிதி இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மத்திய அரசையும், அமலாக்கத் துறையையும் கடுமையாக சாடினார்.அப்போது ஆவேசமாக பேசிய அவர் தனது வீட்டுக்கு அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் தாம் தொடர்ச்சியாக வெளியூர் டூரில் இருப்பதால் சொல்லிவிட்டு வாருங்கள் என கூறினார் மேலும் திமுகவின் கிளைச் செயலாளரை கூட அமலாக்கத்துறையால் எதுவும் செய்ய முடியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்பதற்காக அதன் தலைவர்களில் ஒருவரான அஜித் பாவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்கு மட்டுமல்ல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவர்கள் எல்லாம் தற்போது பாஜகவின் பக்கம் வந்து விட்டார்கள். பாஜகவின் பக்கம் வந்த பிறகு இவர்கள் எல்லாம் புனிதர்களாக ஆகிவிட்டனர். இப்போது அவர்கள் வீட்டில் எந்த சோதனையும் கிடையாது. ஆனால் நான் மோடிக்கும் பயப்படமாட்டேன், ED-க்கும் பயப்படமாட்டேன்” என சவால் விடுத்தார்.

இப்படி உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டு பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் உதயநிதி ஸ்டாலின் நண்பரான எம்பி கௌதம சிகாமணியை அமலாக்கத்துறை அழைத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணிக்கு விசாரணைக்கு சென்ற கௌதம சிகாமணி உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அமலாக்கத்துறை வசம் விசாரணையில்தான் இருந்தார். உதயநிதி ஸ்டாலின் திமுகவின் கிளைச் செயலாளர் கூட மோடிக்கும் ஈடிக்கும் பயப்பட மாட்டான் என கூறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் திமுகவின் எம்பியை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது குறித்து இணையவாசிகள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.