கடந்த 17ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகம், வீடு உள்ளிட்ட பல இடங்களில் துணை ராணுவ படையுடன் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது. கிட்டத்தட்ட 13 மணிநேரம் நடத்த சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளே ஆச்சர்யப்படும் அளவிற்கு பல ஆவணங்கள் கிடைத்தன, இது மட்டுமில்லாமல் லட்சக்கணக்கில் பணம், அயல்நாட்டு கரன்சி கட்டுகள் கிடைத்தன! அத்தனையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனையின் முடிவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
கடந்த 17ஆம் தேதி மாலை அழைத்துச் சென்று விசாரிக்க துவங்கியது அன்று நள்ளிரவு இரவு முழுவதும் அவர் விசாரிக்கப்பட்டார். மீண்டும் நேற்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி, ஆஜரான அதன் பிறகு இன்று காலை அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இந்த வழக்கு விசாரணை குறித்த விபரங்களை அவரிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வரை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனை விசாரித்த அமலாக்கத் துறையினர் இந்த விசாரணையை ஆறு மணி நேரம் நடத்தினர்! இப்படி 6 மணி நேரம் விசாரணை நடத்தியும் இன்று அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணியிடம் மீண்டும் விசாரணை நடத்தி நடத்த அவரை வரச் சொல்லி உள்ளனர்.
காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் ஆறு மணி நேரத்துக்கு மேலாக தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது, இந்த விசாரணையில் சட்ட விரோத பண பரிமாற்றம் மேலும் வெளிநாட்டு கரன்சிகள் புழக்கம் அது மட்டுமல்லாமல் இந்தோனேசியா நிறுவனத்தை 100 கோடி ரூபாய்க்கு விற்றது என பல விவகாரங்களை துருவித் துருவி அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்பதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த முறை பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருக்கும் சமயம் செம்மண் குவாரி எடுத்த விவகாரம் குறித்தும், அதில் ஈடுபட்ட பினாமிகள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிப்பதாகவும், இந்தோனிஷியா நிறுவனம் குறித்தும் அமலாக்கத்துறை கடுமையாக விசாரிப்பதாகவும் தெரிகிறது,
இது மட்டுமல்லாமல் வீட்டில் நிறுத்தி வைத்திருக்கும் வெளிநாட்டு ஆடம்பர கார்கள் மற்றும் வீட்டில் உள்ள இரண்டு பீரோக்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், திறக்க முடியாத போராடித் திறக்கப்பட்ட லாக்கர் போன்ற விவரங்கள் அனைத்தும் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. கண்டிப்பாக இந்த விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அமைச்சர் பொன்முடியையும், அவரது மகன் கவுதம சிகாமணியையும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இன்று நடக்கும் விசாரணை எத்தனை மணி வரை செல்லும் என தெரியாத நிலையில் அமைச்சர் பொன்முடி தரப்பு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என தெரியாமல் இருந்து வருகிறது இது மேலும் திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நெடுங்காலம் எடுத்துக்கொள்வார்கள் என தெரிந்து அமைச்சர் பொன்முடி தரப்பு கடும் கலக்கத்தில் உள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுமட்டுமல்லாது அமைச்சர் பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஹவாலா மோசடி நடந்த தகவல்கள், ஹவாலா பணபரிமாற்ற தகவல்கள் கிடைத்ததால் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை விடப்போவதில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.