24 special

பொன்முடி சொன்ன செய்தியை கேட்டு முகம் வாடி போன உடன் அமைச்சர்கள் ...!நடந்தது என்ன ...?

Ponmudi,knnehru
Ponmudi,knnehru

கடந்த ஜூலை 17 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணியிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.


இதனிடையே, இரண்டாவது நாளாக நேற்று  அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் பொன்முடி. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 10 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து அவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.இந்நிலையில், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின் 85ஆவது பிறந்தநாள் விழா சென்னை வில்லிவாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டு எஸ்றா சற்குணத்திற்கு பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் மீண்டும் அமைச்சர் பொன்முடி பொது நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது ஒருபுறம் என்றால் மறுபுறம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பொன்முடி, கே என் நேரு என யாருடைய முகத்திலும் சிறிது கூட சந்தோசம் இல்லை இன்னும் சொல்ல போனால் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினிடம் சோதனை தொடங்கிய நேரம் முதல் விசாரணைக்கு சென்ற காலம் வரை என்ன நடந்தது என தெளிவாக சொன்னாராம்.

அப்போது உடன் இருந்த அமைச்சர்கள் பலர் அரண்டு போன நிலையில் அடுத்தது என்ன என்று மிகவும் பதற்றம் அடைந்து இருக்கிறார்களாம், இந்த நிலையில்தான் அடுத்தது கே.என்.நேரு தான் மத்திய அரசின் பார்வையில் இருக்கிறார் எனவும் செந்தில் பாலாஜியை மருதுவமனையில் பாதுகாத்தது கேஎன் நேரு என சிலர் டெல்லிக்கு தகவல் கொடுத்ததாகவும் அதன் பேரில் தனக்கு சிக்கல் ஏதும் வருமோ என கே என் நேரு தரப்பு மிரண்டு போயிருப்பதாக கூறப்படுகிறது.