நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பல சேவைகளை மக்களுக்கு ஆற்றி வந்தார் உதாரணமாக மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், பொது நூலகம் அமைத்தல், இரவு நேர பாடசாலை மழை வெள்ளத்தின் பொழுது நிவாரண பொருட்கள் வழங்கியது போன்றவை விஜய் மக்கள் இயக்கத்தால் செய்யப்பட்ட சில தொண்டுகள். அதே சமயத்தில் தமிழக மக்களின் மனநிலையை குறித்தும் தமிழகத்தின் நிலைமை வரும் அரசியல் குறித்த நடவடிக்கைகளையும் கவனித்து வந்துள்ளார் விஜய்! இருப்பினும் அரசியல் பிரேவேசத்தில் எந்த ஒரு அவசரத்தையும் காட்டாமல் நிதானமாகவே இருந்து வந்தார்.
இதனால் கடந்த இரண்டு வருடங்களாகவே அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு சில சேவைகளையும் சில அரசியல் நகர்வுகளையும் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் மேற்கொண்டு வந்தார் விஜய்! இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்கிறாத ஒரு நேரத்தில் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த சமூக வலைதளத்தின் பெயரும் தமிழக வெற்றிக்கழகம் என்று பெயரிடப்பட்டிருந்தது அதோடு தான் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரும் தமிழக வெற்றி கழகம் என்பதையும் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கட்சி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் 2024 இல் போட்டி இடப்போவதில்லை அதோடு இந்த கட்சியின் ஆதரவு யாருக்கும் கொடுக்கப்பட போவதில்லை என்ற தகவல் அடங்கிய அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.
இதற்கிடையில் மழை வெள்ள பாதிப்பின் பொழுது விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய பொழுது விஜயின் புகைப்படத்தை கையில் வைத்தவாரு நிவாரணம் வழங்கியதும் துப்புரவு பணியில் ஈடுபடுகிறேன் என்று இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் செய்த சில நடவடிக்கைகள் விமர்சனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்த பிறகும் அவரது அரசியல் கட்சிக்கு ஏன் இப்படி பெயர் வைத்தார் அப்படித்தானே வைக்க வேண்டும் இப்படித்தானே வைக்க வேண்டும் என்ற பல கருத்துக்களை முன்வைத்து இதனை பேசுபொருளாக மாற்றினார்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி தலைவி பிரேமலதா கட்சி இருந்து வரும் பிரச்சனையை பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். அதாவது, விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்திலிருந்து கடந்த 2010ல் இருந்து இன்று வரை உண்மையாக உழைத்தவர்களுக்கு என்னுடைய செலவில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறேன்.
ஆனால் அவர்களுக்கு எந்த பதவியும் அங்கீகாரமும் கொடுக்கபடுவதில்லை, நடுவில் இருக்கின்ற மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் போன்றவர்கள் உண்மையாக உழைப்பவர்களை முன்னுக்கு கொண்டுவர நினைப்பதில்லை அவர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உயர வேண்டும் என்பதை மட்டுமே நினைக்கிறார்கள். அதனால் ஆரம்பத்திலேயே கட்சி தலைமை இதனை கவனித்து சரி செய்து உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பட வேண்டும் என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில வாரங்களிலேயே அக்கட்சியை சேர்ந்த மகளிர் அணி தலைவி இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது பனையூர் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இந்த தகவல் விஜய் காதுகளுக்கு சென்றதாகவும் இது குறித்த நடவடிக்கைகளை அவர் விரைவில் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.