24 special

திமுக அதிமுக வாரிசுகள் பேசும் ஆடியோ அமிட்ஷா கையில் சிக்கியது...!?

amitshah
amitshah

கர்நாடக தேர்தலுக்கு பிறகு நேரடியாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா தமிழக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில தேர்தலுக்குள் குறிப்பாக தமிழகத்தில் கூட்டணி பஞ்சாயத்தை முடிவிற்கு கொண்டுவர பாஜக தேசிய தலைமை இறங்க இருக்கிறதாம்.


அதற்கு முக்கிய காரணமாக பார்க்க படுவது தொடர்ச்சியாக பாஜகவை ஜூனியர் பார்ட்னராக வைத்து இருக்க வேண்டும் என தமிழகத்தில் திராவிட கட்சிகளான திமுக அதிமுக இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது தெளிவாக அனைத்து ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நிறுத்திய வேட்பாளரை  திமுக வாபஸ் பற்றி மீண்டும் வலுவு குறைந்த வேட்பாளர் நிறுத்தியது, அதற்கு பரிகாரம் செய்யும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தொகுதியை அதிமுக பின்வாங்கி பாமகவிற்கு ஒதுக்கியது, குறிப்பாக உதயநிதி எதிர்த்து போட்டியிட பாஜக சார்பில் குஷ்பு எவ்வளவு முயற்சித்தும் அதை தட்டி பறித்தது.

தற்போது 2024 தேர்தலில் பாஜகவை அதிக இடங்கள் கேட்க வைக்காமல் இருக்க இப்போதே கூட்டணிக்குள் பஞ்சாயத்தை தொடங்கி வைத்தது, போன்ற போன்ற அடுக்கடுக்கான புகார்கள் உள்துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம், திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிமுகவை சேர்ந்த கேபி முனுசாமி நெருக்கம் அதனை தொடர்ந்து கேபி முனுசாமிக்கு அரசு டெண்டர்கள் சிலவற்றை ஒதுக்கியது.

திமுக அதிமுக மாவட்ட செயலாளர் இடையே பரஸ்பர உடன்படிக்கை, பாஜகவை வளராத வண்ணம் கொங்கு மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்களை மாற்றி மாற்றி அதிமுக திமுகவில் இணைத்துக் கொள்வது என பல தகவல்கள் ஆடியோ உரையாடல்களுடன் உள்துறை அமைச்சகத்திலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.

தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் இரண்டு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமே தவிர அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என அழுத்தம் திருத்தமாக டெல்லியிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மாநில தலைவர் இருந்தவர்கள் டெல்லியில் இருந்த தகவலை பகிர்ந்த போதும் இதுவரை டெல்லி அமைதியாக இருந்திருக்கிறது, இதற்கு காரணம் பாஜக அபிமானிகள் என காட்டிக்கொள்ளும் பலர் அதிமுகவிற்கு சாதகமாக டெல்லியில் லாபி செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் இந்த முறை நேரடியாக பாஜக மாநில தலைமையே தமிழ்நாடு அரசியல் குறித்து முழு முடிவு எடுக்க அதிகாரம் தரப்பட இருக்கிறதாம், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் குறைந்தது ஐந்து இடங்கள் பாஜகவிற்கு வேண்டும் என்ற நிபந்தனையுடன் அண்ணாமலைக்கு அமித்ஷா உத்தரவிட இருக்கிறாராம்.

இந்த தகவல்  எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிய வர தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாக அண்ணாமலையை விமர்சனம் செய்த வண்ணம் இருக்கிறார்களாம்,  ஒருவேளை கூட்டணி உடையும் பட்சத்தில் நாங்கள் மோடிக்கு ஆதரவாக தான் இருந்தோம் ஆனால் அண்ணாமலை தான் எல்லாத்தையும் சொதப்பி விட்டார் என்று மக்களை மடம் மாற்றம் செய்யவும் எடப்பாடி பழனிச்சாமி தயாராகி வருகிறாராம்.

இதற்கிடையில் அதிமுகவில் சேர்ந்த முக்கிய பிரமுகரும் திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுருகரும் அதாவது அரசியல் ஆட்டத்தில் இல்லாத இரண்டு வாரிசுகள் தொலைபேசியில் பாஜகவை எவ்வாறு வளர விடாமல் செய்வது என ஆலோசனை செய்த ஆடியோ உரையாடல்கள் பாஜகவிற்கு கிடைத்து இருக்கிறது.

தற்போது இந்த ஆடியோ உரையாடல்கள் மூலம் இதுநாள் வரை பாஜகவை நாங்கள் எங்கள் கூட்டணி கட்சியாகதான் பார்க்கிறோம் என பேசிவந்த அதிமுகவை சேர்ந்த பல தலைவர்களின் உண்மை முகம் டெல்லிக்கு தெரியவந்து இருக்கிறது.

விரைவில் திமுக மீது பாஜக என்ன ஸ்கேல் அளவுகோல் வைத்து இருக்கிறதோ அதே நிலைக்கு மீண்டும் செல்ல பாஜக முடிவு எடுத்து இருப்பதால் புதுச்சேரி வழியில் அதிரடி முடிவு எடுக்க இருக்கிறார்களாம். கர்நாடக தேர்தல் முடிவுகள் வரும் வரை என்ன வேண்டுமானாலும் பேசட்டும் அமைதியாக கட்சி பணியை பாருங்கள் என டெல்லியில் இருந்து உத்தரவு வந்து இருப்பதால் பாஜக மாநில நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளுக்கு நாகரீகமாக பதில் கொடுத்து வருகிறார்களாம். வருகின்ற தமிழ் புத்தாண்டிற்கு பிறகு இன்னும் பல அதிரடி மாற்றங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.