24 special

என்னது அந்த விஷயத்துக்கு அண்ணாமலைக்கு கிரீன் சிக்னலா? ஓஹோ..அப்படி போகுதா?

jp natta , annamalai
jp natta , annamalai

வட மாநிலங்களில் பாஜக எப்படி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு உள்ளதோ அதே போன்று தென் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் முடிவில் முனைப்போடு செயல்பட தொடங்கி உள்ளது என்பதனை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவின் தமிழக வருகை. 


இதுவரை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 10 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகங்களை பாஜக திறந்து வைத்துள்ளது திராவிட கட்சிகளை சிந்திக்க வைத்து உள்ளது. கட்டிடம்  கட்டினால் மட்டும் போதுமா? பூத் லெவலில் பாஜக எப்படி இறங்கி வேலை செய்யணும்... அதற்கான ஸ்கெட்ச்   போட்டு எப்படிஎல்லாம் செயல்படுத்த முடியும் என மத்திய இணை அமைச்சர் எல் முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரிடம்  தனித்தனியாக ஆலோசனை செய்த ஜெ.பி. நட்டா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லிய பல  விஷயத்தை கூர்ந்து கவனித்துள்ளாராம்.

சமீப காலமாக அதிமுக பாஜக கூட்டணிக்குள் சில கருத்து வேறுபாடு எதற்கு? நாடாளுமன்ற தேர்தல் வர இன்னும் ஒரே வருடம் மட்டுமே இருக்கும் நேரத்தில் ஏன் இப்ப பிரச்னை?  நாம சிறிய கட்சிகளோடு கூட்டணி  வைத்து போட்டியிட்டால் சீட் வாங்குவது சிரமம்...வெற்றி பெறுவதும் சிரமம். அது திமுகவிற்கும் ஆதரவாக அமையும் என பேசப்பட்டு உள்ளதாம். அதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அதிமுக உடன் பயணிப்பது தான் நல்லது என்று ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  தான் ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட, அதிமுக எந்த இடர்பாடும் சந்திக்க கூடாது என ஒபிஸ்-ஐ சமாதானம் செய்து வாபஸ் பெற வைத்தது பாஜக.

நிலைமை இப்படி எல்லாம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பாஜக உடன் கூட்டணி தொடர்ந்தால் அது அதிமுகவிற்கு ஆபத்து என அதிமுக மூத்த நிர்வாகிகள் முதற்கொண்டு, ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளும் அட்வைஸ் செய்து வருகிறதாம். இதையெல்லாம் எப்படி கையாளுவது என அண்ணாமலை சில  வியூகம் வகுத்து அதனை ஜெபி நட்டாவிடம் தெரிவித்து உள்ளதால்..... அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் ஜெ.பி நட்டா  

வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலை எப்படி கையாள வேண்டும் தமிழக அரசியலை எப்படி கையாள வேண்டும் என சில முக்கிய விஷயத்தை ஜெ .பி. நட்டா மற்றும் அண்ணாமலை தீவிரமாக டிஸ்கஸ் செய்து  இருப்பதாக பாஜக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

மேலும் இந்த முறை 5 முதல் 8 சீட் வரை பாஜக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தைக்கு தனது வெற்றி வேட்பாளரை அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் மட்டும் பாஜக பின்வாங்குவதாக இல்லையாம். அப்படி என்றால் பாஜக வலிமையாக இருக்கக்கூடிய 10 முக்கிய இடங்களை தேர்வு செய்து, எப்படியும் அதிமுகவிடம் சீட் வாங்கிவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.