24 special

தமிழகத்தில் இனி ஸ்டாலின் கதை கதம் கதம் ....! பெண்கள் விலாசல்!

mk stalin
mk stalin

2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் என்ன மாற்றத்தை உண்டாக்க போகிறது என இப்போதே ஊடக விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன, திமுகவை எதிர்க்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக திமுகவை எதிர்ப்பதை காட்டிலும் கூட்டணி கட்சியான பாஜகவை தினம் தினம் எதிர்த்து வருகிறது.


இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லாத காரணத்தால் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என நினைத்து இருந்த திமுகவிற்கு அதன் கோட்டை என கருத்தப்படும் சென்னை பகுதியிலேயே மக்கள் கொடுத்த பதில் கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில், பெண்கள் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் பலர் சொன்ன முதல் குற்றசாட்டே கடந்த காலத்தை காட்டிலும் மின் கட்டணம் அதிகரித்து விட்டது, இலவச பஸ் எங்களுக்கு தேவையில்லை முதலில் விலைவாசி உயர்வை கட்டுப படுத்துங்கள் என பெண்கள் தெரிவித்து இருந்தார்கள்.

உண்மையில் ஆளும் கட்சிக்கு இயல்பான எதிர்ப்பு உண்டாவது இயற்கை ஆனால் பொதுமக்கள் பொத்தாம் பொதுவாக ஆளும் கட்சியின் ஆட்சி சரியில்லை என சொன்னால் பரவாயில்லை மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, அன்றாட செலவு அதிகரிப்பு என காரணத்தோடு எதிர்ப்பை பதிவு செய்து இருப்பது மிக பெரிய அதிர்வலைகளை திமுகவிற்கு உண்டாக்கி இருக்கிறது.

திமுக படு தோல்வியை சந்தித்த காலத்தில் கூட திமுகவிற்கு கை கொடுத்த பகுதிகளில் ஒன்று சென்னை ஆனால் அதே சென்னையில் பெண்களே திமுக ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து இருப்பது திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் கனவை  அசைக்கும் வண்ணம் அமைந்து இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து எப்படியாவது மனதை மாற்றி விடலாம் என கணக்கு போட்டு இருக்கிறதாம் திமுக.எது எப்படியோ தீவிர திமுக எதிர்ப்பை கையில் எடுக்க போகும் கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் வாக்குகள் செல்ல போவது என்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.