Tamilnadu

ஔரங்கசீப் வந்தால் "மாவீரன் சிவாஜியும்" வீறுகொண்டு வருவார் என பேசிய பிரதமருக்கு வரலாற்றை நினைவூட்டிய தருமை ஆதினம்!

modi
modi

பிரதமர் மோடி உலக புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை புரணமைப்பு செய்து அதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது ஔரங்கசீப் வந்தால் மாவீரன் சிவாஜியும் வீறுகொண்டு வருவார் என குறிப்பிட்டு இருந்தார், இந்த சம்பவம் குறித்து தருமை ஆதினம் பிரதமருக்கு நினைவூட்டல் ஒன்றினை செய்துள்ளார். 


இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :-பாரதபிரதமருக்கு நினைவூட்டல்காசியில் விஸ்வநாதர் திருக்கோவில் விரிவாக்கம் செய்து பாரம்பரியத்தை நிலைநிறுத்தியதற்கு நமது நல்லாசிகள், தாங்கள் உரையாற்றியபோது ஒரு ஔரங்கசீப் வந்தால் மாவீரன் சிவாஜியும் வீறுகொண்டு வருவார் என குறித்தது மகிழ்ச்சி ஔரங்கசீப் காலத்தில் மதகலவரமும் வந்தது அதுபோது தருமையாதீன 4ஆவது குருமணிகள் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் குமரகுருபரர் முனிவரை அனுப்பிதீர்வுகண்டார்கள்.

அதன் வெற்றிசின்னமாக திருச்சின்னம் ஒலிப்பது ஆதீனபாரம்பரியம் இதை குமரகுருபரர் பின்னம்படைத்த சமயவிரோத பிணக்கறுத்து ஓர்சின்னம் படைத்த மாசிலாமணி சித்தர் என்று அரசவையிக்கு சிங்கத்தின் மேலேறிச்சென்றுமடமமைக்க இடம்பெற்று  கேதாரீஸ்வரர் கோயில் அமைத்து இன்றுவரை தருமையாதீன சிஷ்யமடமான திருப்பனந்தாள் காசிவாசி நிர்வாகம் செய்கிறார்கள்.

சமயவழியின்று ஔரங்கசீப் அவர்களை இந்துசமயத்தின் பெருமையை தனியொருவராக இருந்து காத்த ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் குமரகுருபரர் முனிவரின் பெருமையை வரலாறுபேசும்போது கூறியிருக்கலாம் இருந்தாலும் தாங்கள் வாரணாசி தொகுதி வேட்பாளர் என்பதால் அவசியம்., கேதாரீஸ்வரரை தரிசிக்கவும் மீண்டும் வாய்ப்பு வருங்காலத்தில் சமயத்தை நிலைநிறுத்திய தருமையாதீன முதன்மைசீடரான குமரகுருபரர் மகானை நினைவோடு போற்றுவீர் தங்கள் பணி தொடர நமது ஆசீர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.