சமூக வலைத்தளமான முகநூல் மற்றும் யூடூப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அதில் இரு இளம் பத்திரிகையாளர்கள் இருவர் தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து விவாதித்து கொள்கின்றனர். மாரிதாஸ் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த காவல்துறை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஊறுகாய் மாமி என விமர்சனம் செய்த முன்னாள் நீதிபதி சந்துருவை இதுவரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்புகிறார் இளம் பத்திரிகையாளர் உதயகுமார்.
அத்துடன் மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றில் தமிழக அரசு மாரிதாஸை இதோடு விட கூடாது அவர் பிணையில் வெளிவந்தாலும் இனி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசி இருக்கிறார் அப்படி எடுக்க வேண்டுமா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பத்திரிகையாளர் உதயகுமார் செந்திவேல் கொடுத்த பதில் சரியாக அமைந்து இருக்கிறது. அப்படி என்றால் இந்திய இராணுவம் குறித்தும் இந்திய பிரதமர் குறித்தும் அவதூறாக சுந்தரவள்ளி என்ற பெண் பேசிவிட்டு வெளியில் சுதந்திரமாக இருக்கிறார் அவரை ஏன் இந்த காவல்துறை கைது செய்யவில்லை என வெளுத்து எடுத்து விட்டார், இது ஒருபுறம் இருக்க திமுக அரசு மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியாத காரணத்தால் பாஜகவினர் தேசத்துரோக வழக்கு குறித்து பேசி வருகிறார்கள் என மணி சொல்கிறாரே என்ற கேள்விக்கு பதில் கொடுத்த உதயகுமார் செந்திவேல்.
முதுகுளத்தூர் மாணவன் மணிகண்டன் மர்ம மரணம் சொல்வது என்ன? அண்ணனூர் தொழிப்பேட்டை அமைக்க நிலம் கையப்படுத்திவிட்டு பின்பு நிறுத்தி வைத்தது என்ன? சட்டத்தை சரியாக செய்த அரசு அதிகாரிகளை மாற்றுவது ஏன்? பெட்ரோல் டீசல் விலையை குறைக்காதது ஏன் என மிக பெரும் பதிலடியை கொடுத்துள்ளார் உதயகுமார் செந்திவேல்.
இறுதியில் பப்ஜி மதன் என்பவனை குண்டர் சட்டத்தில் அடைத்த திமுக அரசு, பப்ஜி மதன் போன்றே ஆபாச நடவடிக்கையில் ஈடுபடும் பிலிப் பிலிப் என்ற நபர்களை கைது செய்யாதது ஏன்? அவர்களை முதல்வர் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டது ஏன் என பல்வேறு கேள்விகளை சரவெடியாக எழுப்பி இருக்கிறார் இளம் பத்திரிகையாளர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.