Tamilnadu

பிரதமர் புகை படத்தை நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த "பீட்டர்" வெளுத்து எடுத்து நீதிபதி கொடுத்த பெரும் தீர்ப்பு!!

modi
modi

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம்பெற்றுள்ளது எனக்கு அவமரியாதையாக உள்ளது எனக்கு அப்படி இடம்பெறக்கூடாது என்று பீட்டர் மயில் பரம்பில் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். மற்ற நாடுகளில் உள்ள  தடுப்பூசி சான்றிதழில் அந்த நாட்டு தலைவர்களின் படம் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்ட நீதிபதி அவர்கள் மற்ற நாடுகளில் அவர்கள் அவர்கள் பிரதமரை நினைத்து பெருமை கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் இந்தியர்கள் எங்கள் பிரதமரை நினைத்து பெருமை கொள்கிறோம். 


130 கோடி தடுப்பூசிகளை போட்டு இந்திய மக்களை காத்து உள்ள பிரதமர் சும்மா ஒன்றும் வரவில்லை. மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் முறையாக பிரதமராகி உள்ளார். எனவே எங்கள் பிரதமரை நாங்கள் பெருமையுடன் மதிக்கிறோம். இதில் உங்களுக்கு என்ன அவமரியாதை என்று வெளுத்து எடுத்து விட்டார். நீதிபதி ஒருவர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுத்தவருக்கு கொடுத்த பதில் இந்திய அளவில் வயராலகி வருகிறது இது குறித்து பெரியசாமி தங்கவேல் குறிப்பிட்டதாவது 

COVID தடுப்பை எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு வளர்ந்த அமெரிக்காவில் 8 லட்சம் மக்கள் இறந்து போய் உள்ளார்கள். இவ்வளவிற்கும் அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி மட்டுமே.138 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் COVID மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரம் பேர். அமெரிக்காவைப் போல் இந்தியா கையாளப்பட்டு இருந்தால் அமெரிக்காவின் இழப்பை நாம் பார்க்கும் பொழுது இந்தியாவில் 34 லட்சம் மக்கள் இறந்திருக்க வேண்டும். ஆனால் அதை விட 8 மடங்கு குறைவான மக்களே இறப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

இப்பொழுது சொல்லுங்கள் எந்த நாட்டின் தலைவர் மதிக்கப்படவேண்டும்??இவ்வளவு அருமையான சேவைகள் செய்து நாட்டிற்காக உழைத்து இரவு பகல் பாராமல் மக்களின் நலனை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் பிரதமரின் படம் COVID சான்றிதழில் இடம் பெறுவது என்ன தவறு??

இதுபோன்ற துவேஷத்தை எந்த ஒரு பிரதமரும் இந்திய வரலாற்றில் சந்தித்து இருப்பார்களா என்பது சந்தேகமே! இதையெல்லாம் பொருட்படுத்தாது மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இருக்கும் நம் பிரதமர் நம்  பெருமையேஎப்பொழுதும் நம் பிரதமரின் பின்னால் நிற்போம். நாட்டை மிகப்பெரிய வல்லரசாக மாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரளாவில் நீதிபதி ஒருவர் பிரதமர் படம் இருப்பதில் என்ன தவறு என வெளுத்து எடுத்த. சம்பவம் இந்திய அளவில் பரவலாக பேசுபொருளாக மாறிவருகிறது.