24 special

குஜராத் கலவர வழக்கு..! மனுதாக்கல் செய்தவர் மீது நடவடிக்கை..?

Modi
Modi

புதுதில்லி : குஜராத் மாநிலத்தில் 2002ல் நடைபெற்ற கலவரத்தில் உள்நோக்கத்தோடு காங்கிரஸ் அப்போதைய முதல்வர் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி மீது வழக்கு பதிந்தது. சத்யமேவ ஜெயதே. உண்மையே வென்றது என பிஜேபியினர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


குஜராத் மாநில கலவர வழக்கில் மாநில உயர்நீதிமன்றம் பிரதமர் மோடியை வழக்கில் தொடர்பில்லாதவர் என கூறி விடுத்திருந்தது. ஆனால் மறைந்த காங்கிரஸ் எம்பி எஹ்சான் ஜாப்ரியின் மனைவியான ஜாஹியா அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பில் ஜாஹியாவின் மேல்முறையீடு தகுதியற்றது என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சஅநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவின் வாதங்களை மேற்கோள் காட்டி பேசியது. பானையை கொதிக்க வைக்க இந்த வடிவமைக்கப்பட்ட மனுவை தாக்கல் செய்ததாக கூறியதுடன் இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ள அனைவர் மீதும் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளது.

மேலும் யாரோ ஒருவரின் ஆணையின் கீழ்ப்படிந்தே இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கூறப்பட்டுள்ள உள்ளடக்கம் பொய்யால் மட்டுமே நிரம்பியுள்ளது. விசாரணைக்குழு உறுப்பினர்களின் நேர்மையை இந்த நீதிமன்றத்தின் ஞானத்தையும் இந்த மனு கேள்விக்குரியதாக்கியுள்ளது என உச்சநீதிமன்றம் கூறியதுடன் பிரதமர் மோடி மீது அவப்பெயர் உண்டாக்கவே ஜோடிக்கப்பட்ட மனு என கூறி ஜாஹியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதுடன் மேலும் 63 பேரை குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சத்யமேவ ஜெயதே ஜாஹியாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனு தகுதியற்றது எனவும் கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது" என கூறினார். இதே கருத்தை மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணியும் கூறியுள்ளார். சம்பித் பத்ரா மற்றும் ஒய்.சத்யகுமார் கூறுகையில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காங்கிரசின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.