புரளியை கிளப்பி விட்டு அதில் குளிர் காயும் முன்களப்சின் வண்டவாளம் என்னவென்று நடுத்தெருவுக்கு வந்துள்ளது. குதிரையில் வேலுநாச்சியர் இருக்கும் படம் தமிழக ஊர்தியில் இடம்பெற்றதை பார்த்து ஏன் அலங்கார ஊர்தியில் வேலுநாச்சியார் படத்தை பயன்படுத்தி இருக்கீங்க என மத்திய அரசு அதிகாரிகள் கேட்டதாக போலி தகவலை ஒரு முன்களப்ஸ் பதிந்தது.
ஆனால் வீராங்கனை வேலு நாச்சியார் அவர்கள் பெயரில் முதன் முதலில் ரயில் விட்டதே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேலுநாச்சியாருக்கு சிலைகள் மட்டும் தான் வைத்து இருக்கின்றனர். ஆனால் இதனையெல்லாம் தாண்டி அவருடைய பெயரில் ரயிலே இயங்குகிறது என்றால் அது பாஜக தலைமையிலான ஆட்சியில் தான். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வேலுநாச்சியாரை பாஜக கண்டுகொள்ளாத மாதிரி போலி செய்திகளை ஒருபக்கம் பரப்பினாலும் உண்மை மக்களுக்கு தெரியாமல் இருக்குமா?
ஆனால் உண்மை என்ன?75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வேலுநாச்சியார் பிறந்த தினத்தில் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது தமிழக பாஜக தலைமை .அந்த நிகழ்வில் எச் ராஜா, பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்,
அப்போது வானதி சீனிவாசன் அவர்கள் வேலுநாச்சியாரை பற்றி பேசிய பல்வேறு விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வந்தது. இத்தனை சிறப்புகளையும் பாஜக முன்னெடுத்து சென்றாலும் இல்லை என பொய் செய்திகளை போலி முன்களப்ஸ் தொடர்ந்து பரப்பி வருவது பெரும் கேவலமாக இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
அந்த வகையில் சூர்யா சுரேஷ் என்பவரும் தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வீராங்கனை வேலு நாச்சியார் அவர்கள் பெயரில் முதன் முதலில் இரயில் விட்டதே பிரதமர் திரு.மோடி தலைமையிலான பாஜக அரசு தான்..அதுவும் சென்ற ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயிலாக துவங்கப்பட்டது..
தமிழகத்தில் வேலு நாச்சியார் சிலையை தவிர வேற ஒரு திட்டமும் இதுபோல் அவர்கள் பெயரில் இன்றளவும் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர்களை உயர்த்தி பேசுவதாலும், தமிழக வரலாறு புறக்கணிக்கப்பட்டதாக செபாஸ்டியன் சீமான் பேசுவதை இளைஞர்கள் அதிக அளவில் நம்புவதாலும் தான் #dravidianstock இதை கையில் எடுக்கிறது.
இதற்கு முன்களப்ஸ் பக்க வாத்தியங்கள் வேறு.. பொங்கல் பரிசுகளில் உச்சக்கட்ட குளறுபடிகளாலும் சங்கடத்தாலும் மடை மாற்றும் அதே நம்பியார் காலத்து டெக்னிக். 👎இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.