Tamilnadu

பிரபல செய்தி வாசிப்பாளர் திலகா பகிர்ந்த காதல் கதை.. ச்சூ ச்சூ மாரியாம்! யார் அந்த மாரி?

Famous news readerThilaga
Famous news readerThilaga

பிரபல தனியார் ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக பணி செய்துவருபவர் திலகா என்ற திலகவதி இவர் தனது முகநூல் பக்கத்தில் காதல் கதை ஒன்றை பகிர்ந்துள்ளார், பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் ஆண்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார் அவை பின்வருமாறு :-


பெரியவளானதும் என்ன ஆகப் போகிறாய் என ஆசிரியர் கேக்க டாக்டர், என்ஜினீயர், டீச்சர் என்றெல்லாம் சொல்லாமல், சலனமில்லாமல் சிரித்துகொண்டே "தங்கராசு க்கு பொண்டாட்டி ஆவ போறேன் சார்" என்பாள் சின்ன வயசு மாரியம்மாள் -மாரி.(பூ திரைப்படம் )

எட்டு பத்து வயசுல என்ன அவ்ளோ காதல்? ன்னு லாம் கிராஸ் கொஸ்டீன் கேக்கக் கூடாது. கதை மட்டும் கேக்கணும்.  உனக்கு புருசன் யாரம்மா, ஊளமூக்கு ஆளம்மா என்று ஒரு சில்வண்டு, ராசுவை பார்த்து பாட அந்த சில்வண்டை அடிக்க ஓடுகிறாள் மாரி. (என் மாமன எப்படி கலாய்க்கலாம்? )

தங்கராசுவுக்கு முடி வெட்டுபவர் அவன் தலையை 'ஒழுங்காக வை டா' என rough handle செய்கிறார். பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த சோளத் தட்டையை அவர் மூஞ்சி மேலயே வீசிட்டு ஓடுகிறாள் மாரி. (என் தங்கராசு மாமன் மேலயே கை வைப்பியா?) ராசுவுக்கும் சேர்த்து குச்சி ஐஸ் வாங்கி ஆசையாக அவனிடம் கொடுக்க.. 'எனக்கு ஐஸ் வேணாம் மாரி' என polite ஆக மறுக்கிறான் ராசு. 'அப்போ எனக்கும் வேணாம்' என ஆசையாக வாங்கிய ரெண்டு குச்சி ஐஸையும் கீழ போட்டுட்டு ராசுவின் கைபிடித்து பெருமையாக நடக்கிறாள் மாரி. (மாமாக்கு ஐஸ் வேணாம் ன்னா எனக்கும் வேணாம்)

ரெண்டு பேரும் பலூன் ஊதும்போது ராசுவின் பலூன் டப் என உடைந்து போகுது. அவன் முகம் வாடிவிடும் ஒரு நொடிக்கு முன்பே "இதோ இத வச்சுக்கோ" என புன்னகையுடன் தன்னோட பாலூனை  கொடுக்கிறாள். (மாமா முகம் வாடிடக் கூடாதுல்ல)

ரெண்டு மரத்துக்கு நடுவே ஊஞ்சல் கட்டி மாரி அமர்ந்து ஆட ராசு ஊஞ்சலை ஆட்டி விடுகிறான். ஒருபுறம் கையிறு அவிழ்ந்து பொத் என கீழ விழுகிறாள் மாரி. 'அச்சச்சோ என்னாச்சு' என ராசு துடிக்கும் முன்பே... அயயே ஒன்ன்ன்னுமே இல்ல, அடி லாம் படல" என அவனை சமாதானம் செய்கிறாள். (தன்னால தான் கீழ விழுந்துட்டதா மாமா வருத்தப்படக் கூடாதுல்ல)

ஒரே ஒரு "ச்சூ ச்சூ மாரி" பாடலில் தான் இவ்வளவு காதல் காட்சிகளும். (காதலின் depth ஐ சொல்ல cliche காட்சிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இருந்தாலே வெயிட்டு தான்)  தன் உடலை தனக்குத் தெரியாமல்  இன்னொருவன் பார்த்தால் கூட அது தங்கராசு மாமாவுக்கு தான் செய்யும் துரோகம் என்பது போல நினைத்து ஒரு ஒப்பாரியே வைக்கிறாள் மாரி.

இப்படியெல்லாம் காதலித்த மாரிதான் மாமாவுக்காக காதலையும் தியாகம் செய்கிறாள், இன்னொரு ஆளை (complete stranger) கல்யாணமும் செய்கிறாள். எதுக்கு? தங்கராசு மாமா கல்யாணத்துக்கு நம்ம வீட்ல இருந்து யாராவது போகனும் அப்போ தான் மாமன் சந்தோஷப்படும் ன்னு அண்ணனிடம் சொல்ல.. அப்போ அதுக்கு முன்னாடி நான் சொல்ற பையன நீ கட்டிக்கோ ன்னு அண்ணன் சொல்ல.. நொடி கூட யோசிக்காமல் சரி என சொல்கிறாள்... (மாமன் சந்தோசமா இருக்கிறதுக்காக என்ன வேணும்னா செய்வேன்)

இதுக்கு பெயர் காதல் இல்லைன்னா வேற எதுக்கு பெயர் காதல்?  மனவலிமை என்பது பெண்களுக்கு இயல்பிலேயே இருக்கும் ஒன்று என்றாலும் இதெல்லாம் வேற லெவல் தைரியம். காதலின் பொருட்டு தன் தேகத்தை மாமா தவிர வேற யாரும் பார்க்கக் கூடக் கூடாது என சொன்ன மாரிதான் நாளைக்கே இன்னொருவனோடு தன்னை பகிரவும் ஒப்புக் கொள்கிறாள், அதே காதலுக்காக!.  இதற்கு பெயர் strength இல்லைன்னா வேறு எது strength... காதலிப்பவனை கைப் பிடிக்க தேவைப்படும் வலிமையை விட, அதே காதலனின் நிம்மதிக்காக மகிழ்ச்சிக்காக அந்தக் காதலை கைவிட தேவைப்படும் வலிமை மிக மிகப் பெரியது.  

கடைசியில் இவ்வளவு காதலும் தியாகமும் காற்றில் போக, தான் தேவனாய் நினைத்து உருகி உருகி காதலித்த மாமாவுக்கு திருமண வாழ்கை தித்திக்கவில்லை எனத் தெரிந்து அவள் கதறிக் கதறி அழுகும் போது (பின்னணியில் அதே ச்சூ ச்சூ மாரி பாடல் சோக version இல்) நம் மனசு கனக்க வில்லையென்றால் நம்ம விலா எலும்புக்குள்ள இதயம் இல்லை, empty box ஒன்ன உள்ள வச்சிட்டான் ஆண்டவன் ன்னு அர்த்தம். பருவ வயதில் என்னை அதிகம் பாதித்த படம்... இந்தப் படம்.....  பூ! 

காதலில் மூழ்கி அன்புருவான பெண்கள் பலரிடம் கொஞ்சம் கொஞ்சம் மாரியை பார்க்கிறேன். கட்டாறு போல பாய்ந்தலைந்த காதலை கைவிட்ட போது பாதி மாரியாக மாறிப் போனேன். மாரியை மனசுக்குள் மாட்டிக்கொண்டேன்.  பசங்களா டேய்... உங்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட, காதல் கொண்ட பெண்ணுக்குள் 10 விழுக்காடாவது "மாரி" தெரிந்தால் விட்டு விடாதீர்கள். பின்னாளில் வருத்தப் படுவீர்கள்... ஜெஸ்ஸிக்களை மட்டுமே காதலிப்போம்ன்னு நின்னா மாரி-க்களை மிஸ் பண்ணிருவிங்க. 

Bitter Truth: தீவிர காதல் கொள்ளும் பெண்கள் எல்லாருமே அன்பு செலுத்தும்போது "மாரி" ஆக மாறி விடுகிறார்கள்,தங்க ராசுக்கள் மட்டும் எப்போதுமே கையாலாகாதவர்களாகவே இருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் திலகா.. (திலகாவின் மாரி யார் என்ற கேள்வியே இப்போது இதனை படிப்பவர்கள் மத்தியில் எழுகிறது.

More watch video