Tamilnadu

2026 இல் பாஜக ஆட்சி! அலேக்கா 150 MLA பெறுவோம்! அதிரடி காட்டிய அண்ணாமலை! ஆடி போன அரசியல் கட்சிகள் !

Annamalai latest
Annamalai latest

 பாரதிய ஜனதா கட்சியின் புதிய கட்டிடங்களை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இன்று நான்கு மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில் திருப்பூரில், இன்றைய புதிய கட்டிடம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், பொருளாளர் எஸ் ஆர் சேகர், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஜி கே செல்வகுமார், சிடி ரவி உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.


திரளான தொண்டர்கள் சூழ அவர்கள் முன்னிலையில் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வரும் 2020ஆம் ஆண்டு பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும், குறிப்பாக 150 கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என குறிப்பிட்டு பேசினார். இவருடைய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காரணம் தமிழகத்தில் எதிர்க் கட்சி அதிமுக பாஜக வா ? என விவாதம் நடைபெறும் இப்படி ஒரு தருணத்தில் அடுத்த ஆட்சி பாஜக பிடிக்கும் என ஆணித்தரமாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது, அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இன்றைய விழா மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை நிகழ்ச்சிக்கு இடையே திருப்பூர் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் பலரையும் மேடைக்கு அழைத்து தேசிய தலைவர் நட்டா கரங்களால் கௌரவிக்கப்பட்டார். அப்போது, கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டன் எங்கிருந்தாலும் தேடி அவர்களை அடையாளம் காட்டுவோம். கௌரவ படுத்துவோம் என குறிப்பிட்டு பேசினார் அண்ணாமலை.

அதாவது பாஜகவில் மட்டும்தான் சாமானியன் எங்கே இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அலங்காரம் கொடுப்போம் என்றும், இதற்காக கோபாலபுரத்தில் நீங்கள் பிறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கோபாலபுர குடும்பத்தில் பிறந்து இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என குறிப்பிட்டு பேசியிருந்தார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை பாரதிய ஜனதா எடுத்த பல்வேறு போராட்டங்களால் தமிழக அரசு பல்வேறு முடிவுகளை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

பின்னர் பேசிய தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழர் கலாச்சாரத்திற்கும் என்றுமே பாஜக துணை நிற்கும். வாரிசு அரசியலுக்கு பாஜகவில் இடமில்லை. அதேசமயத்தில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவது தான் பாஜகவின் குறிக்கோள் என்றும் பேசியுள்ளார். இன்று ஒரே நாளில் திருப்பூர் திருப்பத்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி கட்டிடங்கள் திறக்கப்பட்ட நிலையில், வரும் பொங்கலன்று மீண்டும் 6 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் திறக்கப்பட இருக்கின்றது.

அதனை தொடர்ந்து அடுத்த வருடம் மார்ச் மாதத்திலும் 6 கட்டிடங்கள் திறக்க உள்ளது என்ற விபரத்தையும் குறிப்பிட்டார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள், பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்றும், அடுத்த 2026 கட்டாயம் பாஜக ஆட்சியில் அமரும்.. கோட்டைக்கு செல்லும் என ஆணித்தரமாக குறிப்பிட்டு பேசினார் அண்ணாமலை.

இவரின் இந்த பேச்சு இன்று முழுவதும் பெரும் விவாதமாக மாறி இருக்கின்றது. மேலும் பல கட்சித்தலைவர்களும் இதை பற்றி உள்ளுக்குளேயே விமர்சனம் செய்து வருகின்றனராம்.