Tamilnadu

மோடி அன்று சொன்னது நினைவு இருக்கிறதா? மிக பெரிய மாற்றம் இருக்கிறது என்று சொன்னது இதைத்தானா?

modi
modi

தவறு செய்தவர்கள் ரொம்ப  நாட்கள் அழப்போற , அதுக்கு  முன்னாடி கொஞ்ச நேரம் சிரிச்சுக்க என வரும் திரைப்படம் வசனம் போல, வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட அனைத்து கிரிப்ட்டோ தேச விரோத சக்திகளுக்கும் பெரிய ஆப்பாக அமைந்து இருக்கிறது கிரிப்ட்டோ தடை .


டிமானிடேசனுக்கு பிறகு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த கூடிய முடிவு என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர், மிகப்பெரிய காரியம் ஒன்றை செய்யப்போவதாக சுதந்திர தின உரையில் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்...அது இதுதானாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பல பொருளாதார தடையை இந்திய அரசு முயற்சித்த நிலையில் கிரிப்ட்டோ கரன்சி மூலம் சதி செயல்களுக்கு பணம் மாற்றப்படுவதாகவும் டெல்லியில் நடைபெற்ற ஒரு வருட போராட்டத்திற்கு இதுவே காரணமாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி தொடர்பான மேலும் சில செய்திகள் பின்வருமாறு :-உஷார் மக்களே..! கிரிப்டோகரன்சியில் முதலீடு ? மத்திய அரசு வைத்த பெரிய ஆப்பு ! தற்போது இளைஞர்கள் மத்தியில் படுவேகமாக பரவி வரக்கூடிய ஒரு முதலீடு என்றால் அது  கிரிப்டோகரன்சியில் தான் என சொல்லியே ஆகவேண்டும். 

மற்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை விட கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், மிக குறுகிய காலத்தில் அதிக லாபம் அடையும் ஒரு வழியாக இந்த முதலீடு இருப்பதால் இளைஞர்கள் அதிக அளவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். 

ஆனால் இதற்கு சரியான ஒழுங்கு முறை இல்லாததால் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கும் தீவிரவாதத்திற்கும் வழிவகுக்கும் என ஆர்பிஐ ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இதற்கு ஒழுங்கு முறை செய்யவேண்டும் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது உள்ள தனியார் கரன்சியை விற்பதும் வாங்குவதும், அதன் மூலம் பொருட்கள் வாங்குவதும், முதலீடு செய்வதும் மத்திய அரசு கொண்டுவரவுள்ள கிரிப்டோகரன்சி மசோதா மூலம் தடை செய்யப்படுகிறது.

இதை மீறி பயன்படுத்தும் தருவாயில் அது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு சமம் என குறிப்பிடப்படுகிறது. மீறினால் 7 வருடம் முதல் 10 வருடம் வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு கொண்டுவர உள்ள கிரிப்டோகரன்சி வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பது கூடுதல் தகவல். 

தொடக்கத்தில் பிட்காயின் உள்ளிட்ட சில காயின்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3500 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் இருக்கின்றன. சவுதி மற்றும் சீனாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளையில் கனடா, ஜப்பான்,ஸ்விஸ் போன்ற நாடுகளில் கரன்சி பயன்படுத்த ஒழுங்குமுறை விதிகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதற்கான விதிமுறைகள் இதுவரை இல்லாத நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே நாடாளுமன்ற கமிட்டி கிரிப்டோகரன்சி குறித்து விவாதம் செய்த பின், இதுகுறித்து மசோதா கொண்டு வர பாஜக எம்பி ஜெயந்த் சின்கா தலைமையிலான அமர்வு ஆலோசனை செய்தது.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி நடந்த ஆலோசனையின்படி கிரிப்டோகரன்சி முழுவதும் தடை செய்ய முடியாத நிலையில் அதற்கு ஒரு ஒழுங்கு முறையைக் கொண்டு வரலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. அதற்கான தனியார் கிரிப்டோகரன்சி கட்டுப்படுத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்று, அதன் பிறகு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவை நடைமுறைக்கு வந்த பிறகு தனியார் கரன்சிகளை இந்தியாவில் பணமாக மக்கள் பயன்படுத்த முடியாது.

ஆனால் ஆர்பிஐ ஒரு டிஜிட்டல் கரன்சியை வெளியிட உள்ளது. அதில் முதலீடு செய்யும் வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்படும். தற்போது உலக அளவில் பரவியிருக்கும் பிட்காயின் உள்ளிட்ட சில கிரிப்டோகரன்சிகளை, இந்தியாவைப் பொறுத்தவரையில் அது ஒரு வெளிநாட்டு பணம் என்ற அளவில் அனுமதிக்கப்படும். மேலும் தற்போது கொண்டு வர உள்ள மசோதா, சட்டமாக்கப்பட்ட பின் 90 நாட்களில், ஒருவர் தன்னிடமிருக்கும் கிரிப்டோகரன்சி குறித்த முழு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அது, கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்வது குற்றமாக கருதப்பட்டு அவருக்கு ஏழு வருடம் முதல் பத்து வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே, ஆர்பிஐ   அறிமுகப்படுத்த உள்ள கிரிப்டோகரன்சிக்காக காத்திருப்பது நல்லது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.