உக்ரைனிலிருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக மீட்கப்பட்டு வருகின்றனர். ருமேனியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்கட்டமாக வந்த இந்திய மாணவர்கள் நேற்றிரவு டெல்லி திரும்பினர்.
டெல்லியிலிருந்து தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த ஹரிஹர சுதன், சகீர் அபுபக்கர், சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன், தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, அறந்தாங்கியைச் சேர்ந்த செல்வபிரியா ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தியும் வரவேற்றார்.
மாணவர்களின் பெற்றோரும் வரவேற்பு அளித்தனர். இரண்டாவது விமானம் மூலம் நள்ளிரவு தாயகம் திரும்பிய மேலும் 12 தமிழக மாணவர்களும் சென்னை வருகை தர உள்ளனர். இந்நிலையில் செஞ்சி மஸ்தான் தெரிவித்த தகவல் கடும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்டு வந்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்தார் அமைச்சர் மஸ்தான்.
இது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது உக்ரைன் ரஸ்யா உள்ளிட்ட இரண்டு நாடுகளையும் சமாளித்து இந்திய தூதரகம் மூலம் பேசி இந்தியர்களை மீட்டு வந்தது, இந்த சூழலில் அமைச்சர் மஸ்தான் இது முதல்வர் ஸ்டாலினின் செயல் என ஸ்டிக்கர் ஒட்டியது பாஜகவினரை கடும் அதிருப்தி அடைய செய்தது, இந்த சூழலில் அங்கு குவிந்த பாஜக மகளிர் அணியினர் பாரத் மாதகி ஜெய் எனவும் பாரத பிரதமரின் புகழ் ஓங்குக எனவும் குரல் எழுப்ப அமைச்சர் மஸ்தான் முகம் மாறியது.
மத்திய அரசின் முயற்சியை ஸ்டிக்கர் ஒட்டி மாற்ற நினைத்த மஸ்தானுக்கு பாஜகவினர் கொடுத்த பதிலடி மிக பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.