கடலூர் மாநகராட்சி மேயர் பதவி கேட்ட விசிகவிற்கு திமுகவினர் கொடுத்த பதில் கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மேயர் பதவி, திருச்சி உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகளை கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.
திருச்சி விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுககூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 55 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 18 வார்டுகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பல இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். குறிப்பாக, கடலூர் மேயர் பதவி, திருச்சி உள்ளிட்ட 9 மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகளைக் கேட்டுள்ளோம். அதை அவர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார் திருமாவளவன்.
இந்த சூழலில் விசிகவிற்கு எந்த மேயர் பதவியல்ல துணை மேயர் பதவி கூட கொ டுக்கப்படாது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தவிர்த்து ஒரு வேலை விசிக தரப்பில் அதிக அழுத்தம் கொடுத்தால் அவர்கள் கவுன்சிலரை அப்படியே திமுகவிற்கு சாதகமாக கட்சி மாற்றவும் தயங்க மாட்டோம் என சில சமிக்கைகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
மகா சிவராத்திரி விழாவை தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னையில் காப்பாலீஸ்வரர் கோவிலில் நடத்தும் வேலையில் அதற்கு விசிக முதல் கூட்டணி கட்சியாக எதிர்ப்பை பதிவு செய்தது இந்த சூழலில் அக்கட்சி மேயர் சீட் கேட்டதும் அதற்கும் திமுகவினர் மறைமுகமாக கொடுத்த பதிலும் கடும் அதிவலைகளை கூட்டணியில் உண்டாக்கியுள்ளது.
More watch videos