Tamilnadu

புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் பாஜக இளைஞர் அணி...! வார்டு வாரியாக ஒளிபரப்பு வேற லெவல் !

vinoj p selvam
vinoj p selvam

தமிழக பாஜக இளைஞர் அணி அடுத்த கட்ட அரசியலுக்கு தயாராகி வரும் தகவல் வெளியாகியுள்ளது, தமிழகத்தில் திராவிட  அரசியலை முடிவிற்கு கொண்டுவந்து ஆட்சி அமைக்கும் சூழல் விரைவில் வரும் என பாஜக தலைவர்கள் சொல்லிவரும் சூழலில் கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.


இந்நிலையில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது மாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க படுகிறது, உள்ளாட்சி அளவில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே அது மாநில அளவில் நடைபெறும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.

இந்தசூழலில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு புதிய வியூகம் ஒன்றிணை பாஜக இளைஞர் அணி தொடங்கி இருப்பதாகவும், இதனை வார்டு வாரியாக கொண்டு சென்று பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு உதவ பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும்

பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர், இதில் முக்கியமான விஷயங்கள் நீட் தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, இல்லதரசிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிட்டது இவை தவிர்த்து கேஸ் விலை 100 ரூபாய் குறைப்பு என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தனர்.ஆனால் இது எவற்றையுமே திமுக அரசாங்கம் தற்போதுவரை நிறைவேற்றவில்லை,

இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்களும் அமைதியாக இருக்கின்றன, இதையடித்து ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை  வார்டு வாரியாக திரையிட தமிழக பாஜக இளைஞர் அணி முடிவு செய்துள்ளதாம்.அப்படி வார்டு வாரியாக திமுக வாக்குறுதி பட்டியல் வெளியிடபட்டால் மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வருவதற்காக போலி வாக்குறுதிகளை அறிவித்துள்ளது என்பது தெளிவாக தெரியும் எனவும் குறைந்தபட்சம் இதன் மூலம் 5 முதல் 8% வாக்குகளை திமுக கூட்டணிக்கு செல்வதை தடுக்க முடியும் என்று அக்கட்சி கணக்கிட்டுள்ளது.

இதற்கான பணிகளை மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் தொடங்கிவிட்டதாகவும், பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணக்கிட்டு விரைவில் இளைஞர் அணி களத்தில் இறங்கி பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. வினோஜ் பி செல்வம் திமுக கோட்டை என கருதப்பட்ட துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு கடும் போட்டி அளித்தவர் என்பதும்,நுனுக்கமான பிரச்சாரங்கள் மூலம் இளம் தரப்பினரை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்ட கருத்திற்கு எதிராக வினோஜ் பதிவிட்ட ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது  அதில்:-  2 கிலோ மீனுக்கு விலை போகக் கூடியவர் TKS Elangovan என்று தன் கட்சியின் மூத்த தலைவரையே தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அமைச்சர் @ptrmadurai அவர்கள் முதல்வர் @mkstalin க்கு என்ன விலை வைத்திருக்கிறார் என இனி வரும் காலங்களில் தெரிந்துகொள்ளலாம்! என குறிப்பிட்டுள்ளார்.

திமுக vs பாஜக என்ற அரசியல் களத்தை மேலும் வலுவாக்க பாஜக இளைஞர் அணி களத்தில் இறங்கி இருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, பாஜக ஆட்சி அமைத்துள்ள மாநிலங்களிலும் அது வளர்ச்சி அடைந்த காலத்திலும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது, அதன் படி தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இளைஞர் அணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை.