Tamilnadu

#BREAKING 50 மக்களவை சீட் , 300 சட்டமன்ற சீட் ஸ்டாலின் நிரந்தர முதல்வர் கனவில் மண்ணள்ளி போட்ட அறிவிப்பு!

tnnews24air
tnnews24air

தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக நிச்சயம் ஆட்சியில் இருக்கும் எனவும், அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்களை காட்டிலும், தனது ஆட்சியில் சிறப்பாக மக்களை சென்றடைய வேண்டும் என ஒவ்வொரு கூட்டத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்து வந்தார்.இந்த சூழலில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது தமிழக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் பொது தேர்தல் வரலாம் எனவும் அதற்கு காரணமாக பாராளுமன்ற கட்டிடம் விரிவாக்கம், மேலும் தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக்கப்படுத்த படலாம் எனவும் குறிப்பிட்டார்.இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட தகவல் தமிழகத்திற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் .,

ஆனால் வட இந்திய ஊடகங்கள் இது குறித்து முன்பே கருத்து பதிவிட்டு வந்துள்ளன, ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு ஒரே தேர்தல் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விகிதாசார அடிப்படையில் தொகுதிகளை பங்கிடவும் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும்,

குடியரசுத்தலைவர், நாடாளுமன்ற மக்களவை தலைவர் ஆகியோருடன் இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் ஆலோசனை செய்துள்ளதாம்.இதனை ஒட்டியே எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது, மேலும் மத்திய பாஜக அரசு முக்கிய எதிக்கட்சியை பேசவைத்து நோட்டம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது, மேலும் பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து குறிப்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் இடையே ஒரு வித பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

ஒருவேலை சட்டமன்றம் நாடாளுமன்றம் இரண்டிற்கும் பொது தேர்தல் ஒரே நேரத்தில் வந்தால், ஆட்சி மாற்றம் உண்டானால் நிலை என்ன என்பது குறித்தும் கடும் அச்சத்தில் உள்ளனராம், அதிமுக மீது தொடர் சோதனை நடத்திவரும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இது ஒருபுறம் என்றால் புதிய ஆளுநர் வருகை, அதன் பின்பு எடப்பாடி பழனிசாமி 2024 ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் என தெரிவித்தது இதன் பின்னணி என்ன என அரண்டு போயி இருக்கிறதாம் ஆளும் தரப்பு.

தமிழகத்தில் தொகுதி மறு உருவாக்கம் நடந்தால் குறைந்தது 50 நாடாளுமன்ற இடங்களும்,300 சட்டமன்ற இடங்களும் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, இது குறித்து பல மாதங்கள் முன்பே வெளியான வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தமிழக சட்டமன்றத்திற்கு 2024- ல் பொது தேர்தல் வரும் என்ற எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிரந்தர முதல்வர் கனவு 2024-ம் ஆண்டுடன் முடிவிற்கு வந்துவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.