
பாஜக தேசிய தலைவர் தேர்ந்த்தேடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் தேசிய அளவிலான நிர்வாகிகள் அடுத்த ஒருவாரத்தில் நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது ஏற்கனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுவிட்டதாம். அதனடிப்படையில் தேசிய நிர்வாகிகள்யார் என்றும் முடிவும் செய்யப்பட்டுவிட்டதாம். இதனை தொடர்ந்து பாஜகவின் செயற்குழு கூட்டம் தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, பெங்களூரு அல்லது தமிழகத்தில் தேசிய செயற்குழு நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்..மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பெற்றுவிட்டது. தென் இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும் கட்சியின் கட்டமைப்பை வலிமைபடுத்த அமித் ஷா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதன் ஒருபகுதி தன் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை தென் இந்திய மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தேதி, இடம் குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், தெற்கை குறிவைத்து பாஜக களம் இறங்கியுள்ளது. மேலும் கர்நாடகாவில் பாஜக வலுவான கட்சியாக உள்ளது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என மாறி மாறி வருகிறது. தெலுங்கானாவில் எதிர்க்கட்சியாக உள்ளது. ஆந்திராவில் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி உள்ளது. கேரளாவிளும் கால்பதித்துள்ளது கேரளாவில்தலைமை பொறுப்பிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பா நியமிக்கப்ட்டுள்ளார்.
இதற்கிடையில் தான் ”மிஷன் சவுத்” என்ற புராஜெக்ட்டை கையில் எடுத்துள்ளது மத்திய தலைமை.தமிழக அரசியல் களம் 2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் வளர்ச்சி ஆளும்தரப்புக்கும் இதர கட்சிகளுக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயின் வருகையும் திராவிட கட்சிகளை சற்று கலக்கமடைய செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நடக்கும் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்தும் தீவிரவாதி பாஷா ஊர்வலம், கோவை குண்டு வெடிப்பு போதை பொருள் கடத்தலில் உள்ள முக்கிய அரசியல்வாதிகள் என அணைந்து ரிப்போர்ட்டுகளையும் தயார்செய்து மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்களாம். தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்தும் சில முக்கிய பைல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தயவில் தான் தேசத்திற்கு எதிரான அமைப்புகள் இயங்கி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது
இதனை தொடர்ந்து தான் தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாத கும்பலுக்கு பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளையும் என்.ஐ.ஏ குறி வைத்துள்ளதாம். மிஷன் சவுத் என்ற சிறப்பு அஜென்ட்டாவை கையில் எடுத்துள்ளது மத்திய பாஜக . இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க இரண்டாவது இடத்தை பிடித்த தொகுதிகளை மையமாக வைத்து அரசியல் காய்களை நகர்த்த உள்ளதாம். மேலும் 80 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை விரைவில் அறிவிக்க உள்ளதாம் பல மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட தயாராகி உள்ளார்கள். 80 சட்டமன்ற தொகுதியில் நடக்கும் பிரச்சனைக்ளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
உள்துறை அமைச்சர் மற்றும் நிதி துறை அமைச்சர் என இருமுக்கிய அமைச்சர்கள் மிஷன் சவுத்தில் இருப்பார்களாம். அமலாக்கத்துறை என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் தமிழகத்தில் தீவிரமாக இறங்க உள்ளதாம். அந்த வேலைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் பெறப்பட்ட உளவுத்துறைகளின் ரிப்போர்ட்டுகள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பல முக்கிய புள்ளிகளுக்கு வலை விரித்துள்ளது அமலாக்கத்துறை . அரசியல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட அண்ணாமலைக்கு அமித்ஷா, ஒரு சிறப்பு அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் தொடக்கம் தான் டாஸ்மாக், அமைச்சர் நேரு, துரைமுருகன் மகன்,வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது மேலும் நீளும் எனவும் கூறப்படுகிறது. மேலேயும் இந்த முறை கண்டிப்பாக கைது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் கதறி வருகிறது எதிர்தரப்பு