Politics

இப்போ தெரிகிறதா வக்பு சட்டத்தின் பவர்... முதல் மாநிலமாக வக்பு சட்டத்தை பயன்படுத்தும் கேரளா..ஸ்டாலினுக்கு விழுந்த ஆப்பு..

waqfboard
waqfboard

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அனல் பறக்கும் விவாததத்துக்கு பின்பு சமீபத்தில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.வக்பு திருத்த மசோதா 2025 இப்போது சட்டமாக மாறியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தை எதற்கு எதிர்க்கிறோம் என தெரியாமல் எதிர்த்து வருகிறது  திமுக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சில அமைப்புகளும் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல, வக்பு சொத்துக்களை பாகுபாடு காட்டுவதையும் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுப்பதே இதன் நோக்கம் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.


இந்தநிலையில், மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு, தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவற்றில் கேரளா ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த சட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கேரள சட்டசபையில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.இந்தநிலையில், திடீர் திருப்பமாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை அமைக்க உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முதல் மாநிலமாக செயல்படுத்துகிறது கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு காரணம்  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்களின் பிஷப் கவுன்சில்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் மற்றும் கேரளா கத்தோலிக்க பிஷப் கான்பரென்ஸ் ஆப் இந்தியா ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளது தான் காரணம். 

மேலும் கேரளாவில் வக்ஃபு வாரிய சொத்துகள் விவகாரத்தை முன்வைத்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள் இதை பாஜக நிறைவேற்றியுள்ளது இதனை தொடர்ந்து கிறிஸ்துவர்கள் நேரடியாகவே பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். மேலும் பல கிறிஸ்துவ அமைப்பை சேந்தவர்கள்  பாஜகவில் இணைந்து வந்தது அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு பேரிடியை இறக்கியுளது. கிறிஸ்த்துவர்களின் ஓட்டுக்களை வைத்து தான் இதுவரை வெற்றி பெற்றுவந்த இடதுசாரிகளின் தலையில் இது இடியை இறக்கியது. இதற்கிடைய தான்  மத்திய அரசால் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்த, இன்னும் இரண்டு மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இது தென் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுககட்சிகளுக்கு பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

 கேரள கிறிஸ்துவ அமைப்புகளுடன் தமிழக கிறிஸ்துவ அமைப்புகள்  நேரடி தொடர்பில் உள்ளார்கள். எனவே பேரரயர்கள் முதல் அனைவருக்கும் வக்பு சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும்படியும் வக்பு சட்டத்தை எதிர்க்கும்  எந்த கட்சியின் போராட்டங்களில் கலந்து கூடாது என   முடிவெடுத்துள்ளார்களாம்.வக்பு சட்டத்தை அடிமட்ட இஸ்லாமியர்களும்  கிறிஸ்தவர்களும் ஆதரித்து வரும் பட்சத்தில் திமுக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. மேலும் வக்பு சட்டத்தினை  எதிர்த்து பேசிவந்தால் மொத்தமாக  களம் மாறும்.