
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருப்பதையும் அந்த அடையாளங்கள் மூலம் கடவுளை நேரடியாக இருப்பதையும் நம்பி வணங்கி வருகிறார்கள். அந்த வகையில் எல்லா கடவுளை விடவும் சக்தி வாய்ந்த கடவுளாக உள்ள சிவபெருமான் சிவ லிங்கமாக காட்சி கொடுக்கிறார். பொதுவாக எல்லா கடவுள்களுக்கும் சிலையானது செதுக்கப்படும் பொழுது ஒவ்வொரு வடிவத்தையும் மனித உருவத்தையும் கொண்டிருக்கும் ஆனால் பெரும்பாலான சிவா ஆலயங்களில் மட்டும் சிவலிங்கமே பூஜிக்கப்படும். சிவலிங்கமே சிவனின் உருவமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழங்கப்பட்டு வரும். அப்படிப்பட்ட அந்த சிவலிங்கம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆற்றலையும் குறிக்கும் விதமாக உள்ளது அதுமட்டுமின்றி இந்த லிங்கமானது தியாகத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் லிங்கம் சில மருத்துவ குணநலங்களையும் மனோதத்துவ முறையிலான மன சிக்கலுக்கு தீர்வை நல்குவதாகவும் கூறப்படுகிறது. அதாவது நம் நாட்டில் சிவலிங்கம் சிவனின் மறு உருவமாக வணங்கப்படுகிறது அதே மாதிரி மனோ தத்துவத்துறையில் மனதையும் உடலையும் ஆன்மாவையும் குணப்படுத்துவதற்கான அதிகாரங்களை சிவலிங்கம் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறதாம்..! சரி சிவலிங்கத்திற்குள் என்ன அர்த்தம் தான் இருக்கிறது என்று முதலில் பார்க்கலாம், அதாவது லிங்கா என்பது ஒரு அனுமானத்தை குறிப்பதாகவும் ஒரு சின்னம் அல்லது ஒரு குறி என்பதை பொருளாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது அதனால் இந்த உலகத்தையே கட்டிக்காத்து மிகப்பெரிய இறைவனாய் உருவமில்லாத இறைவனாக விளங்குகின்ற சிவபெருமானின் சின்னமாக இந்த லிங்கம் குறிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சிவலிங்கம் ஒரு முட்டையை போன்று தோற்றமளிப்பதால் அதனை அகண்ட பிரம்மாண்டத்தையும் குறிக்கிறதாம்.
மேலும், சிவலிங்கம் மூன்று பகுதிகளை கொண்டதாகவும் அடிப்பகுதி பிரம்மாவையும் மத்திய பகுதி விஷ்ணுவையும் மேல் பகுதி தான் சிவனை குறிக்கிறதாகவும் கூறுகிறார்கள்.ஏன் இந்த மூன்று தெய்வங்களை சிவலிங்கம் குறிக்கிறது என்று பார்க்கும் பொழுது இந்து மதத்தின் முப்பெரும் தெய்வங்களாக போற்றப்படுகின்ற பிரம்மா விஷ்ணு மற்றும் சிவபெருமான் படைத்தல் காத்தல் மற்றும் அழித்தல் தொழிலை செய்து வருபவர்கள். அதன் காரணமாகவே சிவலிங்கத்தில் இந்த மூன்று முப்பெரும் தெய்வங்களும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சிவலிங்கம் பல பகுதிகளில் இருந்தாலும் சில இடங்களில் உள்ள சிவலிங்கம் மிகவும் புனிதமாகவும் பிரசித்தி பெற்றதாகவும் வழங்கப்படுகிறது அப்படி நம் தென்னிந்தியாவில் மட்டும் 12 ஜோதி லிங்கங்களும் ஐந்து பஞ்சபூத லிங்கங்களும் மிகவும் பிரசித்தி பெற்றவையாக வணங்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிவலிங்கம் குறித்த அபூர்வமான மற்றும் சுவாரசியமான தகவல்கள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில், சிவலிங்கத்தை போன்று ஒரு பீடத்தை வைத்து அதற்கு மேல் கண்ணாடி போன்ற ஒரு தகடை வைத்து அதற்கு மேல் பம்பரம் போன்று அதாவது சிவனின் மேல் பீடத்தைப் போன்ற ஒரு பொருளை வைத்து பம்பரமாக சுழற்றி விடுகிறார்கள் அந்த பொருள் நிற்காமல் சுழன்று மேலே எழும்புகிறது எப்படி என்றால் தனது அடிபாகத்தையும் மறந்து தகடு மேல் சுழன்று கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து மேல எழும்புகிறது இதன் மூலமே சிவலிங்கத்திலிருந்து ஆற்றல் உற்பத்தி ஆகிறது என்பது புலப்படுகிறதாகவும், இது யுனிவர்சல் ஆற்றல் மற்றும் அதிர்வு OHM ஐ உருவாக்குகிறது. பிரம்மா விஷ்ணு சிவனின் என்பதும் பொருளாகிறது.
மேலும் காந்த ஆற்றலையும் அதிர்வையும் உருவாக்க கோயில்களில் பூஜை செய்யப்படுகிறதாகவும் ஆற்றல் மற்றும் தூய்மையின் உயர் கடத்திகளில் ஒன்றாக இருக்கின்ற பால் சிவலிங்கங்களில் ஊற்றப்படுவதாகவும் அதனால் நாகம் உள்ளிட்ட விலங்குகள் ஈர்க்கப்பட்டு சிவலிங்கத்திடம் அண்டுவதாகவும் கோயிலைச் சுற்றி வரும்பொழுது கோயிலுக்கு ஆற்றல் உருவாக்குவதாகவும் அந்த அதிர்வு நமக்கு ஆன்மீக ஆற்றலையும் அமைதியையும் உருவாக்ககிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி சிவலிங்கத்திலும் சிவலிங்கம் குறித்து வெளிவராத அதிசய தகவல்கள் பற்றிய வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.