Tamilnadu

#BREAKING கடும் பதற்றம் முத்துப்பேட்டையில் போலீஸ் குவிப்பு.. தேதியை அறிவித்து சந்திக்க தயார் கருப்பு முருகானந்தம் அதிரடி !

Karuppu muruganandam
Karuppu muruganandam

திருவாரூர் மாவட்டம் முத்து பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் , தமிழகத்தில் எங்கும் காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டமும், சிலைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும், இந்த நிலையில் இந்த ஆண்டு விநாயகர் ஜெயந்தி அன்று பொது வெளியில் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி மறுத்தது.


இதையடுத்து முத்துப்பேட்டையில் விநாயகர் ஜெயந்தி கொண்டாட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முத்து பேட்டையில் விநாயகர் ஜெயந்தி அன்று விழாவினை கொண்டாடும் பாஜகவின் கருப்பு முருகானந்தம் எதிர்ப்பை பதிவு செய்தார், இந்த ஆண்டு முத்து பேட்டையில் விழாவை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனுமதி அளிக்கவில்லை என்றால்  நாங்கள் தடையை மீறி விநாயகர் ஊர்வலத்தை நடத்துவோம் எனவும், அவர் குறிப்பிட்டார், இதை தொடர்ந்து ஒரு விநாயகர் சிலையை மட்டும் வைத்து வழிபட அனுமதி அளித்தது காவல்துறை, மேலும் அன்றைய தினமே ஊர்வலத்தை நடத்தவும் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யவும் காவல்துறை அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து விநாயகர் ஜெயந்தி ஊர்வலம் இந்த ஆண்டு அமைதியாக நடந்து கொண்டு இருக்கையில், இஸ்லாமிய அமைப்புகள் விநாயகர் ஜெயந்தி ஊர்வலம் சென்ற பகுதியில் சென்று தமிழக அரசு மாநிலம் முழுவதும் தடை விதித்த நிலையில் எப்படி போராட்டம் நடத்தலாம் என கேள்வி எழுப்பி விநாயகர் ஊர்வலத்தை சீர்குலைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பக்கம் காவி துண்டு அணிந்து வந்த இளைஞரை தாக்கி நகை பணத்தை பறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது, இது குறித்து பேட்டி அளித்த தமிழக பாஜக துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார், தடையை மீறுவது மீராதது என்பது எங்களுக்கும் அரசிற்கும் உள்ள நிலைப்பாடு அதனை கேள்வி கேட்க முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

எங்களில் ஒருவரை தாக்கிய நபர்களை காவல்துறை கைது செய்யவில்லை என்றால் மிக பெரிய பின்விளைவை சந்திக்க நேரிடும் கலவரம்தான் தீர்வு என்றால் அதனை சந்திக்க தயார் எனவும், தேதி நாட்களை கூறு வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இரு தரப்பிற்கும் இடையே தற்போதுவரை பதற்றமான சூழல் நிலவுவதால் முத்து பேட்டை பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு உள்ளது, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டையில் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்ற போது தமிழக அரசு கொரோனா பரவலை காரணம் காட்டி தடை விதித்தது, ஆனால் அதே சட்டத்தை மீறி முத்துப்பட்டணம் உட்பட பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.