Tamilnadu

அண்ணாமலை சந்திப்பு பாஜகவில் மாரிதாஸிற்கு என்ன பொறுப்பு ? என்ன பதவி ?

maridhas annamalai
maridhas annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக ஊடக பிரபலமும் ,எழுத்தாளருமான மாரிதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது . இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர் .

விமான நிலையத்தில் மதுரை பாஜகவினர் சார்பில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது ,அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்ற அண்ணாமலை இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் , இதற்கிடையில் அண்ணாமலை மாரிதாஸை சந்திக்க இருப்பதாகவும் , மாரிதாஸை சந்திக்கும் அண்ணாமலை அவரை அரசியலுக்கு அழைக்கலாம் என பாஜக ஆதரவு மட்டத்தில் செய்திகள் பரவியது.

இந்நிலையில் அந்த செய்தி  உறுதியாகியுள்ளது , நேற்றைய தினம் அண்ணாமலை மாரிதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளது , அண்ணாமலை மாரிதாஸை சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் , அதில் இருவருக்கும் இடையே பல்வேறு கருத்து உரையாடல்கள் நடந்துள்ளன , அதில் மாரிதாஸ்  தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார் .

மாரிதாஸிற்கு  இளைஞர் அணி மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் எனவும் அல்லது மாநில சமூகவலைத்தள பிரிவின் தலைவர் பதவி வழங்கப்படலாம் எனவும் பேசப்பட்டதாக சில தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன ,அண்ணாமலை மாரிதாஸை சந்திக்கும் முன்னர் தேசிய அளவில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் இருவர் இதற்கு முன்னர் மாரிதாஸை தனியாக சந்தித்து ஆலோசனை செய்ததாகவும் அதன் அடுத்தகட்டமாக அண்ணாமலை மாரிதாஸை சந்தித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது .

விரைவில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் அன்றோ அல்லது , டெல்லியின் நேரம் கிடைக்கும் நாளிலோ மாரிதாஸ்  பாஜகவில் இணைவது உறுதி எனவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .