Tamilnadu

அண்ணாமலைக்கு குறி தப்பியது எப்படி இரு பக்க "பாதுகாப்பை" நீக்கியது யார்?

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில்  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி வருகின்றன.


பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசும்போது, “பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.

அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இதில் பாஜக கட்சி உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது.ஆளும் கட்சி ஆட்சிக்கு வந்து 8 மாதம் காலத்தில் வன்முறை அதிகரித்துவிட்டது.

இதற்கு எடுத்துகாட்டாகத்தான் பாரதிய ஜனதா அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பார்க்கிறோம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பாஜக தீவிரமாக பிரச்சராம் செய்து வருகிறது. பாஜக கட்சி மிக பெரிய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும். ” என்று தெரிவித்தார்.

மேலும் இது திட்டமிட்ட செயல் முதலில் Y பிரிவு பாதுகாப்பில் இருந்த எனது பாதுகாப்பை X பிரிவாக குறைத்தார்கள் பாஜக தலைமை அலுவலகத்தின் இரு புறமும் உள்ள போலீஸ் செக் போஸ்டை நீக்கினார்கள் இன்று பெட்ரோல் குண்டு வீச்சு இதை நீங்களே பொருத்தி பார்க்கலாம் என குறிப்பிட்டார்.

தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு வீசப்பட்ட நிலையில் அது அண்ணாமலைக்கு வைத்த குறியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை தற்போது வலுவாக எழுப்பியுள்ளது. விரைவில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கின் பல்வேறு அதிரடி திருப்பங்கள் உண்டாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

நேற்று நள்ளிரவு தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Watch videos