இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த பயங்கர திட்டத்துடன் வந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டது எப்படி, ஆப்கான் விவகாரத்தை இந்தியா கையாளுவது எப்படி என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு :- மோடியின் இந்தியா ஆப்கனில் அழகாக விளையாடுகின்றது, இந்திய உளவுதுறை அங்கே தாலிபனுக்குள் புகுந்திருகின்றது, அப்படியே பாகிஸ்தானுக்குள்ளும் ஆப்கனுக்குள்ளும் ஆப்கனை சுற்றியுள்ள தாலிபன் எதிரிகளுக்குள்ளும் ஊடுருவியிருகின்றது
மோடி அரசு தாலிபன் விவகாரத்தை தனியே உளவு என கையாண்டு கொண்டே குவாட் நாடுகளோடு இணைந்து செயல்படுகின்றதுஇது அமெரிக்காவுடன் மிக அணுக்கமான உளவு தகவல்களை பெறுகின்றது, இன்னொரு பக்கம் ஷியா மக்களோடு இணைந்து ஷியாக்கள் மூலம் அவர்கள் எதிரிகளான தாலிபன்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கின்றது
இந்த நுணுக்கமான வலையில்தான் நேற்று டெல்லியில் நாசகாரிகள் 5 பேர் சிக்கியிருக்கின்றார்கள், இவர்கள் மிகபெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் இங்கே அனுப்பபட்டவர்கள், ஆயுதமும் ஆட்களும் ரெடியாக இருந்து இலக்கு எது? தாக்குதல் நாள் எது? எனும் உத்தரவு வர காத்திருந்த நிலையில் சிக்கியிருக்கின்றார்கள் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் இவர்கள், உத்தரவுக்காக காத்திருந்த நிலையில் அவர்களுக்கு உத்தரவிடும் கோஷ்டிகளுக்குள்ளே இருந்து தகவலை கடத்தி வந்திருகின்றது இந்தியா
இந்த 5 பேர் போல இன்னும் பலர் இந்தியா முழுக்க பதுங்கியிருக்கலாம் என்கின்றது உளவுதகவல், வேட்டை தொடர்ந்து நடக்கின்றது இந்திய அரசின் மிக கடுமையான கண்காணிப்பால் மிகபெரிய தாக்குதல் முன் கூட்டியே தடுக்கபட்டு தேசம் முழுக்க ரகசிய உஷார் நிலையில் வைக்கபட்டுள்ளது ,அமெரிக்க சி.ஐ.ஏ போன்ற வலுவான அமைப்புகளுடன் இணைந்து அஜித் தோவால் அசத்திகொண்டிருக்கின்றார்
இந்நிலையில்தான் அவரின் வலதுகரமான ரவீந்திர நாராயண் ரவி தமிழக கவர்ணராக சென்னையில் கால் பதிக்க வந்து கொண்டிருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய வெளியுறவு விவகாரத்தில் மோடியின் ஆட்சியில் வலுவாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், அமெரிக்கா,ரஸ்யா, பிரிட்டன்,ஈரான், சவுதி நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியா வருகை தந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.