தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது வ, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின் ,ஒரு படி மேலே சென்று வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் ,நீட் தேர்வை ரத்து செய்யக்கூடிய ரகசியம் எங்களுக்கு தெரியும் எனவும் பேசியிருந்தார் உதயநிதி .
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது , நீட் தேர்வு முடிந்த பிறகு தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராகவும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டியும் சட்ட மசோதா நிறைவேற்ற பட்டது , இந்த சட்டமன்ற தீர்மானம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை இதனால் எந்த பயனும் இல்லை ஆட்சிக்கு வந்த பிறகும் மாணவர்களையும் பெற்றோர்களையும் திமுக தொடர்ந்துன்ஏமாற்றி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குடம் சுமத்தி இருந்தார்.
இந்நிலையில்., தனியார் செய்தி தொலைக்காட்சியில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற பற்ற நீட் எதிர்ப்பு தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது , இதில் பிரபல மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கலந்துகொண்டார் அவரிடம் சுகிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு தமிழ்மணி கொடுத்த பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எப்போது முழுமை பெரும் என்றால் ஜனாதிபதி ஒப்புதல் பெற்றபின்பே சட்டமாகும் ,ஜனாதிபதி என்பவர் மத்திய அரசு கொடுக்கும் நடைமுறையை பின்பற்ற கூடியவர் எனவே அவர் சட்டத்தை ஏற்க வாய்ப்பே இல்லை இன்று தமிழகம் கேட்டால் நாளை வேறு மாநிலங்களும் கேட்கும் என்றார் .
தமிழக அரசு மாநில உரிமையை பாதுகாப்பது எப்படி என சுகிதா கேட்க மேடம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இத்துணை மாநில உரிமை இல்லை ஒட்டுமொத்த நாட்டின் விவகாரம் கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் மட்டுமல்ல பொது பட்டியலில் உள்ளது , சப்பாத்தி மட்டும் போதும் என்பவனிடம் இந்த அரசாங்கம் சப்பாத்தியை தவிர 18 வகை கூட்டு வைத்து சாப்பாடு போடுகிறது ,கூடவே பாயசமும் கொடுக்கிறது என்ன நியாயம் என கேட்டார்.
உடனே குறுக்கிட்ட சுகிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீம்ஸ் போல் பேசுவது நியாயமா என கேட்க தமிழ் மணி கொடுத்த பதிலில் அமைதியாகிவிட்டார் நெறியாளர் .நான் பாயசம் என தானே குறிப்பிட்டேன் கசப்பு என குறிப்பிடவில்லையே , இங்கு மட்டுமல்ல 150 இடங்களில் சொல்லிவிட்டேன் உங்கள் தொலைக்காட்சியில் மூன்று முறை பேசிவிட்டேன் மத்திய அரசு ஒப்புதல் பெறாமல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்த மாற்றமும் எனக்கு தெரிந்த சட்ட வகையில் இல்லை என அழுத்தமாக தெரிவித்துவிட்டார் .
உடனே தமிழக அரசு ஜல்லிக்கட்டில் தீர்மானம் நிறைவேற்றி வெற்றி பெறவில்லையா என கேட்க மேடம் மாநில பிரச்னையை நாட்டோடு ஒப்பிடுவது தவறு ,ஜல்லிக்கட்டிற்கு தமிழகம் விதி விலக்கு பெற மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது அதானால் சட்டம் நம் மாநிலத்திற்கு மட்டும் செல்லுபடியானது .ஆனால் நீட் தேர்வை அதனுடன் ஒப்பிட வேண்டாம் என ஒரே அடியாக குறிப்பிட்டுவிட்டார் .
இன்னும் பல கேள்விகளை எழுப்பி மூக்கு உடைபட்டு அமைதியாகினார் சுகிதா , கேட்ட கேள்விகளுக்கு வெட்டு ஒன்று துண்டு இறந்து என பதில் கூறுபவர் வழக்கறிஞர் தமிழ்மணி என பலரும் பாராட்டி வருகின்றனர்